உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

-

மறைமலையம் – 11

எயிலார் புறவத் திளையார் திறமே பயில்வாய் தகுமோ பழியார் பிரிவே. மறைநா வுடையாய் மறையோர் புகழ நிறையா ருரைகள் நிரைப்பா யெனுமால் குறையா மதியாய் குணமா மலையே இறையே பிரிய விரெனா னெனுமால்.

(5)

(6)

கரவோ அறியாய் கணமும் பிரியாய் உரவோய் பிரிதல் கரவோ வுரையாய் அரவே ரிறைவ னடியே யுறைவாய்

விரவுந் திறமோ விரியா யெனுமால்.

(7)

கடலோ கரையுங் கருங்கல் லுருகும் மடலார் மலர்க்கண் மலிநீர் சொரிய மிடலார் மரமும் மெழுகா யுருகும் அடலே றனையோ யறியா யிதுவோ

அருமை மகனை யகன்றா யெனுமால் திருவை நிகருஞ் சிறுமி யரையும் ஒருவா வுறைத லுறுமோ வெனுமால் பெருமா பிரியப் பெறுமோ வெனுமால்.

மொழியப் படுமோ முனிவா மனையின் கழியாத் துயரங் கருத லரிதால்

அழியாப் புகழென் னனையின் றுயர

மொழியா யெனயா னுனைவேண் டுவெனே.

3. மன்னைக் காஞ்சி

வாங்குகடல் குழிப்ப வண்புனன் முகந்து

பாங்குபெற வுயரிய வோங்குமலை யேறி மன்னுயிரஞ்ச மின்னுட னுரறி வரையாது பெய்த மழைக்குலம் போல,

மறைநூற் பொருளுந் திருநெறித் தமிழும்

(8)

(9)

(10)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/135&oldid=1580092" இலிருந்து மீள்விக்கப்பட்டது