உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாமணிக் கோவை

அரும்பொருள் பயப்ப வொருங்குடன் காட்டி, உவலைச் சமயிகள் கவலை யெய்தச் சைவ சித்தாந்த மெய்யொடு கிளர உரைமுறை நிறுத்தனை பலநாண் மற்றஃ தழுந்து துயர் கூரக் கழிந்தன்று மன்னே. நீறினி தளைஇய வீறின தாகி

அகன்றுநிவந் தொழுகிப் பரந்தநின் னுதலுங் கருகி முரிந்த திருவளர் புருவமும்

பேரருள் நிரம்பு சீர்கெழு விழியும்

முல்லை முகிழன்ன மெல்லிய நாசியுங் கொவ்வை யன்ன செவ்விய விதழும் முருந்தி னன்ன திருந்திய வெயிறு நவையாறு கன்னற் சுவையின தாகிக் குயிலிசை யோடு பயிலுத லுடைத்தாய்க் காணினுங் கேட்பினுங் கருதினுங் களிதரும் உரையொடு பயின்ற புரையறு மொழியுஞ் செறிவொடு தசைந்த நறுவிய கதுப்புங் கத்தரிக் கொழுங்கடை யொத்திடு செவியுஞ் சுரிவளை போல வரியொடு திரண்டு பூதிமணி திகழுந் தீதறு மிடறும்

எழுவெனத் திணிந்து முழவெனச் சரிந்துபின்

எழிலொடு கிளருங் கொழுவிய தோளும் நான்முக னறியா வான்பொருள் வழக்கும் உரைமுடிவு கடந்த விருபொருட் கல்வியும் ஒருவழி யெமக்குந் திருவொடு காட்டும் யாழ்நுனி யோடு வாழ்திருக் கையும் நீறு சண்ணித்த நிகரறு மேனியும் மருளது நீங்க வருளொடு காட்டி

நாயினு மிழிந்த பேயின மாகிய எம்மையு மாண்ட பின்னை யம்மைப்

பண்டைய வுருவொடு சென்றனை மன்னே,

நின்னடி சேர்குநர்க் கெல்லா மின்னருள்

103

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/136&oldid=1580093" இலிருந்து மீள்விக்கப்பட்டது