உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

மறைமலையம் – 11

திரிவின்றிச் செய்குவை மன்னே, மருவலர்

நின்முகங் கண்டொன் றிரக்குவ ராயினது வரையாது வழங்குவை மன்னே, யொருகால் வெகுண்டுரை யாடுவை யெனினும் நகையொடும் எம்முறு விழுமங் களைவோய் மன்னே, தாயினு மெமக்குத் தலையளி புரிந்து தந்தையிற் பெரிய தயவினை மன்னே, காழியில் வந்த கௌணியக் கன்றின் மிகுத்துரை யெமக்குத் தொகுத்தனை மன்னே, மறைமுடி வெல்லாந் துறைபடி நிறுவிக் குறையற வீந்த குரிசிலை மன்னே,

மண்ணிடை வாழ்வும் விண்ணிடை வாழ்வும் மதியாது வைகிய சிதைவறு திருவினை சிவன்றிரு வடியே சிவணிய குறிப்பின் அவமது களைந்த தவமுறு தன்மையை கட்புலம் படராது விட்புலம் படர்ந்து கண்ணுத றிருவடி நண்ணினை யாயினும். பிரிவுறு துன்ப மரிதரி தாகலின் விழி நீ ருகுப்ப மொழியிடை குழற வானாத் துயர மடைது மன்றே. குருவே கண்ணே திருவே மணியே அறிவின் கொழுந்தே பொறையினிறைவே எம்முள மமர்ந்த வம்மணி விளக்கே புகழின் வடிவே பொலிவுறு மமுதே கலையின் றிறனே நிலையுமெ முயிரே உயிரிடை நிரம்பு செயிரறு முணர்வே உணர்வுக் குணர்வே யொப்பிலா முதலே அறிவொடு கூடாச் சிறியே முறுதுயர்

பரிவொடு களைமதி யெனநின்

திருவடி நினைந்தொரு வரம்வேண் டுவலே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/137&oldid=1580094" இலிருந்து மீள்விக்கப்பட்டது