உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

1.

2.

3.

பாமணிக் கோவை

அடிக்குறிப்புகள்

105

சோமசுந்தரக் காஞ்சி யாண்டும் பாராட்டப்படுதலைக் கண்டு அழுக்காறுற்ற புலவர் சிலர் அதன்கண் குற்றங்காணப் புகுந்து மறுப்பெழுத, அதற்கு எதிர்மறுப்பாக அடிகளார் சோமசுந்தரக் காஞ்சியாக்கம் என்னும் நூலை உரைநடையில் இயற்றி வெளியிட்டனர். தொல்காப்பியப் பொருளிலக்கண நுட்பங்களும் பிறவும் விளங்க விரித்து உயரிய தனிச் செந்தமிழ் நடையில் வரையப்பட்டது இந்நூல்.

இச் செய்யுட்கள் ஆண்பாற் கையறுநிலை குறித்து வந்தன. கைஅறு நிலை - செயலற்றநிலை.

"செழித்திடவோ கழித்திடவோ நீ தோன்றியது எம் குருவே” என்று தொடரும்; 'தா அறு கெடுதல் இல்லாத, அழிதல் இல்லாத; நீதி வழிப்படு வாதிகள் - முறைமை வழிப்பட்ட வாதத்தார்; விளம்பிடவோ - விளக்கமாய்த் தெளிவிக்கவோ; இனி - இனியேனும்; சிவம் - கடவுளுக்குச் சிறப்புப் பெயர்; திப்பிய - சிறந்த; துதைந்த செழித்து அடர்ந்த; தொழும்பர் - தொண்டர்; கடன்மை கடமை; சுடர்ந்திடவோ - விளங்கிடவோ;'

‘புத்தர் கரைந்திடு பொய்மொழி' என்றது, உலகம், சார்பில் தோன்றும் என்பதும், அதனைத் தோற்றுவிக்கக் கடவுள் தேவையில்லை என்பதும்; கரைந்திடு - பொருளின்றிச் சொல்லும்; என்றது, பொய்ச் சொற்கள். புத்தர் - பொதுவாகப் புத்த சமயத்தார்; கீழ்ந்தது -திருவாதவூரர் சாய்த்தது; போதுவதன்று போதுமானதன்று; என்றோ - என்று கருதியோ; 'குருவே நீ தோன்றியது என்று முடிக்க. புன் - தாழ்ந்த; சமணுக்கு - சமண் சமயத்துக்கு; ஒருவன் - பாண்டி மன்னன்; ஈந்ததும் - தண்டனை தந்ததும்; தோற்றுநர் - புத்தர் சமணர் அல்லாத ஏனைய சமயத்தார்; சுத்த சைவம், இங்கே வைதிக சுத்தாத்வைத சைவ சித்தாந்த சன்மார்க்கம்; முரணி - மாறுபட்ட; தெய்வ நலம் சாராத பொதுமக்களை நினைந்து, ‘ சொல்வழி வாரலர்' என்றார்; அத்திறம் - அப்பித்துத் திறம்; பேது உரை - மயக்கச் சொல். கூறுநரின் வாதுரையை என்க; போழ்ந்து - பிளந்து, இங்கே அழிந்து என்னும் பொருட்டு; போழ்ந்து பிறங்குவதின்று – அழித்து விளங்குவதில்லை; தொத்து -கொத்து; நன்று தொடங்குதும் பெரிது தொடங்குவேம்.

மதி வழுக்கி மண்ணிடை வீழ்ந்ததுவோ என்க; வீழ்ந்ததுவோ வீழ்ந்தமையோ; பெயர், மல்லல் - செழுமையுடைய; சிவம் வீசி - சிவமணங் கமழ்ந்து கொண்டு; வீழ்ந்ததுவோ விண்ணுலகி லிருந்து இவ்வுலகினில் வந்து தோன்றியதோ; உட்பொருள் - உள்ளுள்ள கருத்து; நலத்தக - நன்றாக; வந்ததுவோ - நான்முகன் வந்தவாறோ; கைகாட்டுரை - கைகாட்டி உரைக்கும் அருள் மொழி; அது, அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள்; ‘சின்முத்திரை' என்பதும் இது! எழுந்ததுவோ – எழுந்த நிலையோ; மான் மகள் திருமகள்; தூ மகள் உமை: மா பெருமைமிக்க; இல்வினை - இல்லறச் செயல்கள்; கூடிவந்ததுவோ - மூவரும் கூடி வந்தபடியோ; வள்ளுவர் வந்ததுவோ -வள்ளுவர் வந்த வகையோ; திருவள்ளுவர் இல்லறச் செயல்கள் வாயிலாக மாதவப் பெருவாழ்வும் விளக்கினமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/138&oldid=1580095" இலிருந்து மீள்விக்கப்பட்டது