உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

❖ - 11❖ மறைமலையம் – 11

17. தண்டலம் பாலசுந்தர முதலியார் அவர்கள்

(இது சென்னை தொண்டைமண்டல துளுவ வேளாளர் உயர்நிலைப் பள்ளித் தலைவராயிருந்தவரும் இரங்கூன் முதன்மை நீதிமன்றத்தில் மொழி பெயர்ப்பாளராகப் பணியாற்றி வந்தவருமான, தண்டலம் திரு. பாலசுந்தர முதலியாரவர்கள் 1908 இல் இறைவன் திருவடி நீழலை அடைந்தகாலை, அவரது பிரிவாற்றாமையினால் மறைமலையடிகளால் பாடப்பெற்ற

இரங்கற்பா

மணிநிறக் கடல்சூழ் மாநில மாந்தர்

பிணியற வாழ்நாள் பெரிதென எண்ணித் திணியிருள் வானில் திடுமெனத் தோன்றித் தணிமினின் மாய்வது சாற்றினை ஐயா!

(1)

ஆங்கிலம் உணர்ந்தாய் அருந்தமிழ் உணர்ந்தாய் மேங்கிளர் சைவமும் மேதக உணர்ந்தாய் ஈங்கிவை உணரினும் இறப்பினை நழுவி நீங்குவ துணராய் நீத்தது முறையோ!

(2)

கல்வியும் பெறுவார் கனநிலை பெறுவார் செல்வமும் பெறுவார் சீர்பல பெறுவார் பல்புகழ் பெறுவார் பலர்உளர் நின்போல்

நல்இயல் புடையார் நனிசிலர் ஐயா!

மண்மேற் பிரிந்தால் மறித்தும் பெறலாம்

விண்மேற் பிரிந்தால் மீண்டது வருமோ!

கண்போல் இனியாய் கருதற் கினியாய்

நண்பா இனிநீ நண்ணுவ திலையே!

(3)

(4)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/149&oldid=1580106" இலிருந்து மீள்விக்கப்பட்டது