உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

❖ 11❖ மறைமலையம் – 11

18

மறைமலைக் காஞ்சி

இதுகாறும் இப்பகுதியில் மறைமலை அடிகளார் அவர்கள் தம்மாசிரியரையும் அருமை நண்பர்களையும் பிரிந்து வருந்திப் பாடிய இரங்கற் பாக்களைக் கண்டோம். 1950 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் அன்று அடிகளார் அவர்களைப் பிரிந்த தமிழ்ப்பேருலகம் கண்ணீர்மல்கப் பாடிய இரங்கற் பாக்கள் சிலவற்றை இங்குக் காண்போம்.)

தமிழின் தீஞ்சுவை

தனித்தமிழின் தீஞ்சுவையும் சைவத்தின் நறுஞ்சுவையும் தாழ்விலாமல்

இனித்திட்ட நடையினிலே எமக்களித்த மறைமலையார்

இல்லா ராகப்

பனித்திட்ட தமிழ்நாட்டின் பாவலரும் நாவலரும்

படர்வ தெங்கே?

இனித்திட்டம் ஏதுண்டு தமிழரசு பெறுவதனுக்(கு)

என்னே! என்னே!

தமிழ்ப் பண்பு

மறைமலையைக் கலைக்கடலை மதிக்கொழுந்தை

அக்கொழுந்தின் வனப்பை வைப்பை

முறைதிறம்பாச் சிவப்பணியை முதுநூல்கள் பலவிளைத்த

முகத்தை அன்பின்

புலவர் அரசு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/151&oldid=1580108" இலிருந்து மீள்விக்கப்பட்டது