உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாமணிக் கோவை

உறையுளை நற்றமிழ்ப்பண்பை உணர்ச்சியினை ஊக்கத்தை ஊதி யத்தைக்

குறைவின்றி இனிப்பெறுநாள் கூடுங்கொல் அறிவுடையீர்

கூறுவீரே!

119

வித்துவான் மு. அருணாசலம்பிள்ளை.

மேன்மை நலம் விளக்கினையே!

புன்மைமிகு குழுவினர்கைப் போய்ப்புகுந்த தமிழன்னை வன்மையிலள் வளமுமிலள் வடமொழியின் துணையின்றேல் நன்மையிலள் இறந்தொழிவள் எனக்கரைந்த நவையகற்றி மென்மையவள் தனித்தியங்கும் மேன்மைநலம் விளக்கினையே! விளக்கியவாய் எழுதியகை வெந்தழலில் போய்ப்புகுத அளக்கலா ஆய்வுரைநூல் அலைகடந்தும் அகம்புறமும் விளக்கெனவே நின்றுலகை விழுமநிறை கடலழுந்த இளக்கத்தால் புலவரெலாம் ஏங்கிநனி இனைந்தனரே!

- சித்தாந்த பண்டிதர் புலவர் ப. இராமநாத பிள்ளை.

நீயோ மறைந்தாய்!

நீயோ மறைந்தாய் நிறைவுறு தமிழின் சாயல் மறைந்தது தனித்தமிழ் குறைந்தது சைவக் கொண்டல் சாய்ந்து வீழ்ந்தது ஐயகோ ஐயகோ அருள்மறை மலையே வையக மெல்லாம் மாழ்க மறைந்து ஐயநீ சென்ற இடமறி கில்லேம் சிவபரம் பொருளின் திருவடி நீழல் உவந்தினி திருக்கும் உயர்குணக் குன்றே உன்புகழ் நிலைக்க உலகெலாம் பரவுக!

- செல்லூர்கிழார் செ. இரெ. இராமசாமிபிள்ளை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/152&oldid=1580109" இலிருந்து மீள்விக்கப்பட்டது