உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

11 ✰

மறைமலையம் – 11 முனிவர் இயற்றிய சூத்திரமும் அதன் முதனூலாகிய வேதாந்தமும் ஒரு நெறிப்பட்டுச் சைவ சித்தாந்தப் பொருளே போதிக்கு மென்பதனை விளக்கியவன்றே ஔவையார் அவற்றை ஏனைச் சைவநூல்களோ டொருங்கு தலைப்பெய்து

66

ஒருவாசகமென்றுணர்” என்று கூறுவாராயிற்றென்பது.

ஞ்

இனி, வேதாந்த சூததிரம் மாயாவாதப் பொருளையே போதிக்கு மென்பார்க்கு, அவ்வேதாந்த சூத்திரத்தின் முத னூலாகிய உபநிடதங்களும் அப்பொருளையே போதிக்கு மென் றுரைத்தல் வேண்டும். அதனையும் அவ்வாறுரைப் பவே, ஒளவையார் பாகுபாட்டுணர்ச்சியின்றி, மாயாவாத நூல்களைச் சைவசித்தாந்த நூல்களோ டொப்பவைத் தோதினாரென்னுங் குற்றமுண்டாம். அல்லதூஉம், மாயா வாத நூல்களோ டொப்பவைத் தோதப்பட்ட தோவார திருவாசக முதலிய திருவாக்குகளும் மாயாவாத நூல்களே யாமென்று பெறப்பட்டுச் சைவசித்தாந்தப் பொருளெல்லாம் விட்டொழிக்கப் பட்டுப் போமன்றோ? இத்துணைக்குமிடஞ் செய்யும் அப்பொருள் ஈண்டைக்கு ஒரு சிறிதும் இயையு மாறில்லை. அற்றன்று. வேதாந்த சூத்திரம் மாயாவாதப் பொருளே நுதலுவ தென்பதற்குச் சங்கராச்சாரியர் அதன் கருத்தறிந்து கூறிய விழுமியவுரையே சான்றாமாலெனின்; அவர்க்கு முன் அதற்கங்ஙனமே சிறந்த வோருரை விரித்த நீலகண்ட சிவாசாரியார் உரைப் பொருள்பற்றி வேதாந்த சூத்திரப் பொருட்டுணிவு கோடு மென்பார்க்கு லாகாமையின் அது பொருந்தாது. அல்லதூஉம், நூலாசிரியர் கருத்தறிவதற்குச் சங்கரர் பாடியப் பொருளைக் கரவியாகக் கோடல் முற்றிலும் நீக்கத்தக்க போலியுரையாம். அல்லதூ உம், நீலகண்ட சிவாசாரியர் முதலான தொல்லாசிரியரால் உரை யெழுதப்படாத பத்து உபநிடதங்களுக்குச் சங்கரர் உரையெழுதியிருப்பதனால் மற்று அவ்வுரைப் பொருளையே கருவியாகக் கொண்டு ஆண்டும் மாயாவாதக் கருத்தையேயேற்றி, அவற்றையும் ஒழித்தல் வேண்டும். ஆதலால், நூலாசிரியர் கருத்தைத் துணிதற் பொருட்டுச் சங்கரர் பாடியப் பொருளையே கரு வியாகக் கோடல் பல வழூஉக்களுஞ் செறிந்து மேன்மேற் கிளைத்தற்கேதுவாமென் றொழிக.

றுக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/161&oldid=1580118" இலிருந்து மீள்விக்கப்பட்டது