உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனிமொழிப்பிரகாசிகை

129

இனி, சங்கரர் வேதாந்த சூத்திரக் கருத்தறிந்து உரை யெழுதினா ரென்றலும் பொருந்தாது; என்னை? நீலகண்டர், பண்டிதாராத்தியர், இராமாநுசர், ஆனந்த தீர்த்தர் முதலிய ஆசிரியரெல்லாரும் சூத்திரப் பொருளுரைக்கும்வழி ஒரவகையால் இணங்கிச் சொல்லும் பொருளும் ஒரு நெறிப் பட்டுச் செல்ல வுரைத்து, அஃதியாண்டும் சீவபரபேதங் களை விரித்து விளக்குவதென்றே வலியுறுத்துக் கூறுவாராக, ச்சங்கரர் தாமட்டும் அவரொடு முரணிச் சூத்திரப் பொருளைக் கிடந்தவாறெடுத்துத் தம்மதத்தோடு இணக்கி உரைக்க மாட்டாமையான், அச் சூத்திரங்களிற் சிலவற்றை அலைத்து ஈர்த்துப் பொருளுணர்த்தியும், சிலவற்றிற்குச் சொல்லும் பொருளம் மிக வருவித்துரைத்தும், சிலவற்றிற்கு கருத்துகள் கற்பித்தும், சிலவற்றிற்றிற்கு மாட்டுறுப்புப்பட நிகழ்த்திச் சொற்களைத் துணித்தியைத்துப் பொருள் கொண்டும், சிலவற்றிற்குச் சிறப்பில்லாத பொருளுரைத்தும் இவ்வாறெல்லாம் சூத்திரங்களை நலிந்து பொருள் சொல்லிப் பெரிதும் இடர்ப்பாடுறுவர். இங்ஙனமெல்லாம் இடர்ப் பட்டும் முயற்சியளவு பயன்பெறுதலின்றி “மலைக்கல்லி யெலி பிடித்தவாறு' போல சீவபரங்களை யபேதமென்று கூறி வாளாபோயினார்.

இன்னும் சங்கராச்சாரியர் தமது

பாடியத்தின் கண்ணே “அபரேது வாதிநா” என மொழிந்து தாமுரைக்குஞ் சூத்திரவுரையோடு மாறுபடும் ஆசிரியர் பலருளரெனத் தாமே கிளந்து கூறுதலும், அவர்க்குப் பின் வேதாந்த சூத்திரவுரை கூறிய இராமாநுசர் தாமுரைப்பனவெல்லாம் முன்னை உரையாசிரியரான "போதாயன தங்க திரமிட குகதேவ கபர்திந்பருசி" முதலியோர் வழிப்பட்ட ன வென்றலும், அம்முன்னையுரையாசிரியருள்ளும் போதாயனர் சங்கராச் சாரியர்க்கு முன்னுரை கூறிய பூருவவாசிரியராதலால் அவருரைத்தவுரை வழியே யாமுரை எழுதுகின்றாம் என இராமாநுசர் பின்னும் வலியுறுத்தலும், அங்ஙனந் தொகுத் தோதப்பட்ட பழையவாசிரியன்மாருள் திராவிடர் எனப் படுவோர் எல்லாவாசிரியர்க்கும் பழமையானவராய் வேதாந்த சூததிரவுரை கண்டருளிய தமிழ் முனிவராதலும் உணரும் வழிப் பின்னையுரையாசிரியரான சங்கருரைதான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/162&oldid=1580119" இலிருந்து மீள்விக்கப்பட்டது