உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

11

மறைமலையம் – 11

மாட்சியுடையார்க்குச்

கண்டு

வியாச சூத்திரக் கருத்தறிவிக்கும் மெய்யுரையெனத் துணிபு காட்டுதல் நல்லறிவு சிவணுவ தன்றாம். முன்னே சொல்லப்பட்ட திராவிட ரென்னும் பழையவாசிரியர் வேதாந்த சூத்திரம் சைவசித்தாந்தப் பொருள் மெய்பெறக் கிளக்கும் அரியதொரு நூலாதல் விழுப்பமுடைய மெய்யுரை யதற்குரைத்தருளினாராக, அதற்கிணங்காது அவரோடும் பிறவாசிரியன்மாரோடும் பெரிதும் முரணித் தமக்கு வேண்டியவாறே சூத்திரப் பொருளை நலிந்து புதுவதோருரை எழுதிய சங்கரர்மாட்டு வெகுட்சியும் இரக்கமுடையோராய் இராமாநுசர் முன்னை யாசிரியருரைக்குப்

பெரும்பான்மையும்

தாமொரு நல்லுரை கண்டாரென்க.

66

சங்கரருரை முன்னையாசிரியருரைக்கு

-

ாருந்தத்

இணங்கு

மாயின் இராமாநுசர் தாமொரு புத்துரை எழுத வேண்டிற்று இல்லையாம். அவ்வாறின்றி அவருரை சூத்திரக் கருத்தோடு பெரிதும் மாறுபட்டுக் கிடத்தலினன்றே தாமவருரையினை ஆண்டாண்டு மறுத்து வேறுரைவிடுவராயினார்? அது கிடக்க, சர்வான்மசம்பு சிவாசாரியார் சித்தாந்தப் பிரகாசிகையில் மாயாவாத நூல் செய்தவன் வியாதன்” என்று கூறுதலும், வடமொழி தென்மொழி மாப்பெருங்கடல் நிலைகண்ட ஆசிரியர் சிவ ஞான யோகிகளும் அவ்வாறே திராவிட மாபாடியத்தின்கண் உரைத்தலும் என்னையெனின்; - நன்று கடாயினாய், ஆண்டு மாயாவாதநூல் செய்தவன் வியாதனென்ற தன்றி வேதாந்த சூத்திரம் மாயாவாதம் போதிப்பதென்று அப்பெரியார் யாண்டும் ஓதாமையின் அவர்க்கது கருத்தன் றென்க. அது கருத்தாயின் ஆசிரியர் சிவஞானயோகிகள் “மறையினா லயனால்” என்னுஞ் சித்தியார் செய்யுளுரையிலே 'அவ்வேதத்தைக் கருமகாண்டம் ஞானகாண்டமென் றிருவகைப் படுத்தெடுத்துக்கொண்டு அதன் பொருளை உறுதி செய்துரைக்கும் நூலாகிய பூருவமீமாஞ்சை உத்தரமீமாஞ்சைகளையும் என்னும் உரைக்கூற்றால் வேதத்தின் ஞானகாண்டப் பொருளைத் தெளித்துரைப்பது உத்தரமீமாஞ்சை யெனப்படும் வேதாந்த சூத்திரமென்ற லென்னையெனக் கடாவுவார்க்கு விடுக்க லாகாதென்பது. இனி அங்ஙனம் ஞானகாண்டப் பொருளை உறுதிசெய் துரைக்கும் உத்தரமீமாஞ்சை மாயாவாதம்

66

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/163&oldid=1580120" இலிருந்து மீள்விக்கப்பட்டது