உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ

முனிமொழிப்பிரகாசிகை

131

நுதலுவதென்றே கொள்ளற்பாற்றெனின், அவ் வேதத்தின் ஞானகாண்டமும் அப்பொருளே பயப்பதென்று கோடற்கு ஞ்செய்யுமாகலானும/ அங்ஙனங் கோடலும் ஆசிரியர் சிவஞான யோகிகள் கருத்தோடு பெரிது முரணுவ தாகலானும் அவ்வாறு சொல்லுதல் அடாதென்றொழிக. அல்லதூஉம், வேதவியாதர் வேதாந்த சூத்திரம் ஒன்றே செய்தாராயின் ‘மாயாவாதநூல் செய்தவன் வியாதன்' என்றன் மாத்திரையானே அங்ஙனம் பொருள்கோடலாம். அவர் ஆன்மாக்கள் பக்குவத்தின் பொருட்டு இதிகாசங்கள், புராணங்கள் முதலாகப் பலதிறப்படும் நூல்களியற்றினா ராகலானும், அவற்றுள் இக்காலத்து வழக்கமின்றாய் இறந்துபட்டன பலவாதலானும் அங்ஙனந் துணிபொருள் கூறல் ஏதமாம் என மறுக்க மேலும், பாணினி முனிவர் தமது அட்டாத்தி யாயியின்கண் வியாதர் பிக்ஷு சூத்திரங்கள் இயற்றினாரெனக் கூறுகின்றார். பிக்ஷ க்களெனப் படுவோர் பௌத்த சந்நியாசிகளாவர்; ஆகவே அவர்க்குரிய பௌத்த சமய நெறியினை விளக்கும் பொருட்டு எழுதப்பட்டன.பிக்குசூத்திரங் கள் என்று கோடலுமாம்; மாயாவாதம் பிரசின்ன பௌத்தமென வழங்கப்படு மாதலின், அங்ஙனம் நூல் செய்தமை நோக்கி 'மாயாவாத நூல் செய்தவன் வியாதன்' என்று சொல்லப்பட்ட தென்று கோடலே பொருத்தமாமென்க.

இன்னுங் கந்தபுராணம் இயற்றிய கச்சியப்ப சிவா சாரியார் இப்பெற்றியெல்லாம் இனிதுணர்ந்தன்றே “ஏத்திடு சுருதிகளிசைக்கு மாண்பொருள், மாத்திரைப் படாவெனா மாசில் காட்சியர், பார்த்துணர் பான்மையாற் பலவகைப் படச், சூத்திரமானவுஞ் சொற்று வைகினான்” என்று அதனியல்பு வரையறுத் தோதுவாராயினதூஉமென்க. இதனுள், சுருதிப் பொருள் உறுதி பெறாமல் பலரும் L பலவகையாலுணருமாறு ஞ்செய்து கிடந்தமையால், அஃதங்ஙனமாகாமை உண்மைப் பொருள் தெளித்தற் பொருட்டு அதனுண் பொருளெல்லாம் ஒரு பிண்டமாகத் திரட்டி வேதாந்த சூத்திரம் செய்தருளினாரெனவும் அது சீவ பரபேதங்களை விளக்கும் பல வகுப்புடையதாய்ப் பொலிவு பெற்றதென்றும் சொல்லப்பட்டவாறு காண்க; ஈண்டுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/164&oldid=1580121" இலிருந்து மீள்விக்கப்பட்டது