உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

மறைமலையம் – 11 11

‘பலவகை' என்றது மறைமொழிபோற் றலைமயங்கிக் கிடவாமல் அது பல அத்தியாய வகுப்புடைத்தாய் நிற்றலை இங்ஙனம் பொருள் கொள்ளவறியாது ‘பலவகைப்பட' என்பதற்குப் பலசமயத்தாருந் தத்தமக்கிணங்கப் பல பொருள் கொள்ளு மாறு என்று பொருளுரைப்பார்க்குச் சுருதிப் பொருள் பஃறலைப்பட்டு மயங்கிக் கிடத்தலின் சூத்திர மியற்றுவாராயின ரென்னும் மேலை மொழிப் பொருளோடு அஃதியையாமை யானும், அச்சுருதிப் பொருளைப் போலவே மயக்கந்தருதற் கேதுவாகப் பின்னும் ஒரு நூலியற்றினாரென்றல் அவர் பெருமைக் கேலாமையானும் அன்றி அங்ஙன மியற்றுதலாற் போந்த பயன்றான் என்னையெனுங் கடா நிகழுமாதலானும் அது பொருந்தாதென மறுக்க.

அது கருத்தாயிற் ‘பல பொருள்' என்று தெளியக் கூறுவார்மன். இங்ஙனமெல்லா நுணுகியாராக வல்லார்க்கு ஆசிரியர் வஞானயோகிகள் கருத்தினிது து புலப் படுமாதலின், அவர் கருத்தறியாது கூறுவாருரைபற்றி ஈண்டைக்காவதோர் இழுக்கில்லை என்க. வேதாந்த சூத்திரத்தைச் சங்கரபாடியத்தோடும் ஆங்கிலேய பாடையில் மொழி பெயர்த்துரைத்துப் புகழ்பெறும் தீபாவென்னம் ஆங்கிலப் பெரும்புலவர் தமது முகவுரையில் சங்கரபாடியப் பொருள் வேதாந்த சூத்திரக் கருத்தோ டொருசிறிதும் யையாமையை விரித்து விளக்கி, பின் அச்சூத்திரப் பொருளிவை யென்று விடுப்பனவெல்லாம் சித்தாந்த சைவப்பொருளோ டொற்றுமையுறுத லுணரவல்லார்க்கு

தினிது

யாமீண்டுரைப்பனவெல்லாம் வாய்மையேமென்ப திQ விளங்கும். அல்லதூஉம், வேதாந்த சூத்திரம் சங்கரருரைப் பொருளோடியைந்து, சீவப்பிரமவாதத்தைக் கிளந்தோதும்

வழியதெனிற் றொடங்குழியே “அதாதோப்ரஹ்மஜிஜ்ஞாஸா" என்றுரையாமல் “அதாதோஜீ ஜீஜ்ஞாஸா" என்ற மயக்கறக் கூறும்; அங்ஙனமின்றிப் பிரமப் பொருளையே யாராய்வ தாக வெழுந்தமையால், அது மாயாவாதப் பொரு பாருளோ டொற்றுமையுறுதல் யாண்டைய தென்றொழிக.

L

வேதாந்த சூத்திரம் மாயாவாதப் பொருளையே கருக்கொண்டு கிடத்தலின், அந்நுணுக்கமுணர்ந்து மாயா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/165&oldid=1580122" இலிருந்து மீள்விக்கப்பட்டது