உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனிமொழிப்பிரகாசிகை

133

வாதப் பொருளே பயப்ப உரையெழுதிய சங்கராச்சாரியரை அதுபற்றி மாயாவாதியெனவைத் தெள்ளுத லமையாதா மெனவும், பிருகற்பதி உலகாயத நூலும், சுக்கிரன் மாயாவாத நூலுமியற்றியவாறு போலத் தாமும் ஓரோர்கோட்பாடு பற்றி யங்ஙனமுரை யெழுதினாரெனவும் திருநீறு அக்கமணி யணிதல், திருவைந்தெழுத்தோதல், சிவபூசை முதலிய அருஞ்சைவநெறி மேற்கொண்டு சிவபுயங்கம், சிவானந்த லகரி, சௌந்தரியலகரி முதலிய பல வேறு வகைப்பட்ட சைவ நூல்களியற்றிச் சைவ சமயத்தை நிறீஇப் புறச்சமயநெறி கடிந்து விளங்கும் சைவப் பெரியாரெனவும் உரையாமோவெனின்; உரையாமன்றே, வியாழ வெள்ளிகள் அங்ஙனம் உலகாயதநூலும், மாயாவாத நூலுமியற்றுதற்குக் காரணம் புராணங்களுரைப்பக் காண்டும், பிருகற்பதி இந்திரன் பொருட்டும் சுக்கிரன் சூரன் முதலாயினார் பொருட்டும் அவ்வாறியற்றினர். சங்கராச்சாரியர் எவர் பொருட்டு யாது காரணம் பற்றி மாயாவாதபாடிய மியற்றினாரெனக் கூறியிறுக்கலாகாமையுணர்க.

-

உலகை மயக்குதற்பொருட் டஃதியற்றினாரெனின், அதனையொரு நூலாகத் தாமே இயற்றுவதல்லது. பிறி தொருவர் நூற்கு உரை உரை யெழுதி அதனையம்முகத்தான் விளக்குதல் பெரிதும் இழுக்குடைத்தாய் முடியுமென்பது. உயர்ந்த பொருளையுயர்ந்த தோராற்றாற் றெரித்துணர்த்திய வேதவி யாதரை மாயாவாதியெனவும், அவ்வுயர்ந்த நூற்பொருளை இழிந்ததாகத் திரிதுணர்ந்து இழிந்ததோராற்றால் விளக்கிப் பெரியதொரு குற்றஞ் செய்த சங்கராச்சாரியரைச் சித்தாந்த சைவரெனயும் மயங்கி முறைபிறழ்ந் துரைத்தல் நியாயமன்றாம். ஆற்றாயினும், சங்கராச்சாரியர் மாயாவாத பாடிய முரைத்தது பற்றி, அவரை மாயாவாதியாகத் துணிதல் அமையாதாம் பிறவெனின்;- நன்று கடாயினாய், அவ்வுரைப் பொருளால் அவரை அம்மதவாதியாகத் துணியாதொழியின், வேறு அவர் தமது சித்தாந்த சைவ மரபு தெற்றென விளங்கவெழுதிய நூல் யாதோவெனவும், அத்தகைய நூலொன்றுள் வழி அதனால் அவர் சித்தாந்த சைவரென்பது இனிது துணியப்படுமன்றே யெனவுங் கடாநிகழ்ந்துழி அதனை விடுத்தல் வேண்டும். அங்ஙனம் விடுதற்குக் கருவியாய் அவராற் றனிமுதலாய் விரிவாகவாதல் சுருங்கவாத லெழுதப்பட்ட நூலொன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/166&oldid=1580123" இலிருந்து மீள்விக்கப்பட்டது