உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

11*

மறைமலையம் – 11

றின்மையின் அவரை யங்ஙனஞ் சித்தாந்த சைவரென்றல் அடாதென்றொழிக. அற்றேலஃதாக, இனிச் சிவ புஜங்க முதலிய சைவநலந் திகழும் அரிய நூல்களியற்றினாராலெனின்;- அதுவும் பொருந்தாமை காட்டுதும்.

அவர்

அப்பெற்றியவாஞ்

சைவகிரந்தங்களியற்றிய

வாறு போலவே, விஷ்ணு புஜங்கம்-பஜகோவிந்த சுலோக முதலிய நூல்களுமியற்றி, மற்றிவ் விருவகை நூல்களையும் விவகாரத்திற் சத்தியமெனக்கொண்டு மேலாம் வழிக்குப் பாய்ப் பொருள்களாமென் றொழித்தலானும், அவர் வழியொழுகும் ஏனைமாயாவா திகளும் திருநீறு சிவமணி திருவைந்தெழுந்து சிவபூசை முதலியவைகளையும், வெள்ளை மண் கோபீ சந்தனம் துளசிக்கட்டையணி திருவெட்டெழுத்து திருமால் வழிபாடு முதலியவைகளையும் ஒத்து நோக்கிக் கடைப்பிடித்து, மற்றிக் கடைப்பிடிப்பையும் பெருநெறியில் பொய்ப் பொருள் களாமென்று கழித்தலானும், சங்கராச்சாரியரைச் சைவரெனத் துணிவமென்பார்க்கு அஃதியாம் அவ்விவ்வேதுக்களால் வைணவ ரெனத் துணிதுமென்பாரை நீக்கா மறுதலைப்பொருளை யுடன் கொண்டுவரும் ஏதுப் போலியாய் முடிதலானும், அவர் வழிமுறையில் வருவாரெல்லாரும் மாயாவாதிகளாகவே யிருப்பக் காண்டலன்றி, வேறு பிறராகக் காணாமையானும் அவரைச் சைவரென்று கூறுதல் போலியென்றொழிக.

வெளுத்ததெல்லாம் பால், கறுத்ததெல்லாந் தண்ணீர் என்றுணருந் தமக்கென வொன்றிலாரைப் போல், மாயா வாதிகளிடும் புறக்கோல அளவால் மயங்கிச் சங்கராச் சாரியரைச் சைவரெனக் கூற லுண்மை முறைதிறம்பு முரையாம். மாயாவாதிகள் படிற்றொழுக்கத்தை நன்றுணர்ந்த எம்மாசிரியர் உயர்திரு நாயகரவர்கள் 'உத்தம வாததூலவாதூல' த்தில் 'ஏதுவெனுஞ் சொல்லு மெழினான்மறைகூறு, மீசனெனுஞ் சொல்லு மினிதொன்றாப் பேசவுனக் கென்னோ கெடுமதி தான்” என்றிழித்துக் கூறுதலானும் இவ்வுண்மை கடைப்பிடிக்க, அன்னோர்க்கு ஈசன் - விஷ்ணு ஏசு அல்லாவெனுஞ் சொற்கள் ஒரு பொருளவாமென்றுணர்க.

66

-

-

ஞ்

இனி 'முனிமொழியும்' என்பதில் 'முனி' என்னுஞ் சொல்லுக்கு 'வாதவூர் முனிவர்' என்று பொருள் கோடல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/167&oldid=1580124" இலிருந்து மீள்விக்கப்பட்டது