உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* முனிமொழிப்பிரகாசிகை

135

ஈண்டைக்கேலா தென்பதூஉஞ் சிறிது காட்டுதும், சொற் சுருங்கிய வாய்பாட்டானோதிப் பொருள் விளக்குவான் புகுந்த ஒளவையார் இயற்பெயரானும், அவ்வியற் பெயர் போலத் தாங்கருதிய பொருளை இனிது விளக்குஞ் சிறப்புப் பெயரானும் ‘தேவர் குறள்' ‘நான்மறை’ ‘மூவர் தமிழ்’ ‘முனிமொழி' ‘கோவை திருவாசகம்’ 'திருமூலர் சொல்' எனத் தெளிய வெடுத் தோதினார். இவற்றுள், தேவர்குறள் “மூவர் தமிழ்” தொகைகளில் எனுந் ‘தேவர்’ ‘மூவர்” என்னும் அடைமொழிகள் வழக்குப் பயிற்சியாற்றிரு வள்ளுவரையும், திருஞானசம்பந்த சுவாமிகள், திருநாவுக்கரசு சுவாமிகள், சுந்தரமூர்த்தி சுவாமிகள் முதலாயினோரையும் நிரலே குறித்து நின்றன.

-

இனி, வாதவூரடிகளைப் பேராசிரியர் “திருவாதவூர் மகிழ் செழுமறை முனிவர்” என்று சுட்டியோதுதலின் அவரையே ஒளவையார் ‘முனி’ என்றாரெனின்; அற்றன்று, அருகிய வழக்கா யாண்டேனு மோரிடத்து ஒரு காரணம் பற்றி அச்சொல் அவ்வாறு பயன்படுத்தப்படுவதன்றித் திருவாதவூரடிகள், மாணிக்க வாசக சுவாமிகள் என்பன போற் பரவைவழக்காய் நிகழ்வதின்மையானும்,சிறப்புப் பெயராற் றாங்குறித்த பொருளைச் செறித்து விளக்குவான் புகுந்த ஔவையார்க்கு அம்முறைதவறி யருகிய சொல்லாற் கூறுதலிழுக் காய் முடிதலானுமென்பது. அல்லதூஉம் வாதவூரடிகளுக்கு மட்டும் 'முனி' என்னுஞ் சொல் வழங்குவதாயின், அங்ஙனம் பொருள்கோடல் சிறுபான்மை பொருந்தும். 'முலையமுத முண்ட முனி' ‘வாகீதமுனி' 'வன்றொண்டமுனி' என வேறு பிறர்க்கும் அப்பெயர் வேறு வேறு நூல்களில் வழங்கக் காண்டலின் அதுவுமமையாது. இதுவன்றியும், ஒளவையார் எடுத்தோதிய இத்திருவெண்பாவில் ‘வேதவியாதமுனிவ’ரைத் தவிர வேறு முனிவரிலர். அல்லதூஉம், திருவள்ளுவ முனிவர், சம்பந்த முனிவர், திருநாவுக்கரசு முனிவர், திருமூல முனிவர் என்று சைவ சித்தாந்திகள் தம்முள் வழங்குவதுஞ் செய்யார்; அது தமது வழக்கமான பெயர்களொடு மாறுகொள்ளு மாதலின், அற்றேல், அப்பர் சுவாமிகளை ‘வாகீச முனிவர்' என்று வழங்குதலென்னை யெனின், அஃதவர் பழம்பிறப்புச் சிறப்புப் பற்றி யவ்வாறு வழங்கப்படுவதாகலின் அவ்வாறு வினாதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/168&oldid=1580125" இலிருந்து மீள்விக்கப்பட்டது