உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

  • மறைமலையம் – 11

கடாவன்றென மறுக்க. இனி 'முனி' என்னுஞ் சொல்வழக்குச் னி சடகோபமுனி, மணவாளமாமுனி, வரவரமுனி, நாத முனி முதலியவாக வைணவர் குழுவில் மிக்குநிகழக் காண்டலின், இச்சொல்லை திருவாதவூர்ப் பெருமானிடமேற்றிக் கூறுதலாற் போந்த சிறப்பென்னையெனக் கடாவி மறுக்க.

சைவசமயிகள் வைணவப் பெரியோரை முனியென்று கூற வொருட்படார்.வைணவரும் சைவப்பெரியாரை ‘முனிவர்' என்று கூறுார். பாரிசேடத்தாற் சைவரும் வைணவரும், மாயாவாதி களும், பிறரும் வேதவியாசரை 'வேதவியாச முனிவர்’ என்றே வழங்குப. இங்ஙனம், முனியென்னுஞ் சொல்வழக்கு வாதவூரடி களுக்குப் பெயராய்ப் பரவைவழக்கிற் பயிலக் காணாமையானும், அது வியாதருக்கே யவ்வழக்காய் நிகழ்வதானும் 'முனிமொழி' என்பதற்கு ‘வாதவூர் முனிவர்சொல்' எனப் பொருளுரைப்பார் கூற்று வெறும்போலியே யாமென்றுணர்ந்து கொள்க. அல்லதூ உம், ‘தேவர் குறள்' ‘மூவர் தமிழ்' 'திருமூலர் சொல்' என முன்னும் பின்னுமெல்லாம் செய்யுட் கிழமைக்கண் வந்த ஆறாம் வேற்றுமைத் தொகைப்பட வுரைத்து ‘முனிமொழியுங் கோவைதிருவாசகம்' என்புழிமட்டும் பெயரெச்சத் தொடராக வைத்துக் கூறுதல் நியமமுறை பிறழ்ந்தொழிதலென்னும் வழூஉக்கிடனாய், இதனை எண்ணுப் பொருட்டாக வைத்தாரோ, பெயரெச்சப் பொருட்டாக வைத்தாரோவென்று ஐயுறுதற் கேதுவாய் முடிதலினங்ஙனங் கூறுதல் ஒருவாற்றானும் பொருந்தாதாமென மறுக்க.

செய்யுள் செய்வார்க்குத் தாங்கொண்ட வழக்குமுறை பிறழ்தல் வழுவாமென்பது ஆசிரியர் சிவஞான யோகிகள்

சூறாவளி'யில் ஆங்காங்குக் கூறுமாற்றானுமுணர்க.

அல்லதூஉம் ‘தேவர்குறள்' 'மூவர் தமிழ்' ‘திருமூலர் சொல்’ என்புழியெல்லாஞ் சொற்சுருங்கவுரைத்து, ஈண்டுமட்டும் 'முனிமொழியும்' எனக்கூறுதல் 'சொற்பல்குதல்' என்னுங் குற்றத்திற்கிடமாதலானும் அங்ஙனம் பொருள் கூறலாகாமை யுணர்க. அல்லதூஉம், நிரல்படக் கோத்தெண்ணிச் சொல்லு நெறிக்கிடையே, ஒன்றைனைப் பெயரெச்சமாக வைத்துரைத் தல் கட்டுரைச்சுவை குன்றுமாறு அஃகிய செவிப் புல னுடையார்க்கெல்லாம் இனிது புலனாம். நன்று சொன்னீர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/169&oldid=1580126" இலிருந்து மீள்விக்கப்பட்டது