உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை

159

உடல், உளம் :

4. மணமலர்

மறைமலையார் திருமுகம், தாமரை மலர் அன்னது; உடல் பொன்னிறம்; உயரம் 5 அடி; திரண்டதாள் - தோள்; குயில் குரல்! பெண்மையில் பிறங்கும் பண்புகள்! அவர் தம் வாழ்வியலை அவர் தம் அருமை மைந்தர் மறை திருநாவுக்கரசு வடித்தெடுத்து வழங்குகின்றார்:

“அடிகளின் ஒன்று விட்ட மாமன் மகள் சவுந்தரவல்லி. அவர் நிறம் கறுப்பு; பண்போ கரும்பு; பொருந்திய உருவம்; அடிகளுக்கு மூன்று ஆண்டுகள் இளையவர், சிறு பருவமுதல் அடிகளும் சவுந்திரமும் அன்பு நிறைந்தவர்களாய் ஆடிப்பாடி வளர்ந்தனர். ஆண்டு வளர வளர அவர்களை அறியாமலே அவர் களுக்குள் காதல் வளர்ந்து வந்தது. சவுந்திரத்திற்கு அகவை 13, அடிகளுக்கு அகவை 16.

66

“சின்னம்மையார் தம் தனி மகனார்க்குக் கடிமணம் செய்ய நினைத்தார்.பெற்றோர் சிலர் தம் சிவந்த அழகான நங்கைமாரை அடிகளுக்கு மணமுடிக்க முன் வந்தனர். அவர்களில் ஒருத்தியைத் தம் மகனுக்கு மணமுடிக்க அன்னையார் முயன்றார். அடிகள் காதலில் முனைந்து நின்று தம் அன்னையின் இசைவைப் பெற்றார். அவ்வளவில் சவுந்திரம் காதல் வென்றது. திருமணம் சிறப்பாக நடைபெற்றது.’

தமிழ்க் காதல் :

மறைமலை சவுந்திரம் காதல் வெளிப்படு முன்னர், சின்னம்மையார் தம் குடும்பநிலை கருதித் திருமண முயற்சியில் ஊன்றினார். அடிகள் திருமண முயற்சியைத் தடுத்தார்; திருமணம் செய்துகொள்ள முடியாதெனவும்மறுத்தார்; சின்னம்மையார் பல்கால் மன்றாடினார்; அதன் பின் தாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/192&oldid=1580149" இலிருந்து மீள்விக்கப்பட்டது