உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

மறைமலையம் – 11 11 ✰

வேண்டும் தமிழ் நூல்களை வாங்கித் தருவதாக இருந்தால் திருமணத்திற்கு இசைவதாகக் கூறினார். அம்மையார் நூல்கள் வாங்கித்தர ஒப்பினார்; தமிழ் நூல் பெரும் பட்டியல் ஒன்றை வ வழங்கினார் மறைமலை. அப்பட்டியலில் கண்ட நூல்களை வாங்க அந்நாளில் முந்நூறு உருபா ஆயிற்றாம்! அதனை வாங்கித் தந்த பின்னரே தம் வாக்குப்படி திருமணத்திற்கு இசைந்தாராம்! மறைமலையின் தனிக்காதல் பெரிதா? தமிழ்க் காதல் பெரிதா? ஒன்றை ஒன்று விஞ்சுவதா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டிய செய்தி இது.

சிந்தாமணி :

பதினாறாம் அகவையில் திருமணம் கொண்ட மறைமலை பதினெட்டாம் அகவையில் சிந்தாமணி என்னும் மகவுக்குத் தந்தையானார்! சிவநெறிச் செம்மல் மறைமலை! சைவசித்தாந்த சண்டமாருதத்தின் மாணவர் மறைமலை! நம் அருமை மகவுக்கு இட்ட பெயர் 'சிந்தாமணி’! ஆம்! சிந்தாமணியில் மறைமலையார் தோய்ந்த தோய்வின் வெளிப்பாடு இது! "இலக்கியம் சமயம் கடந்தது” என்பதை மெய்ப்பிக்கும் சான்றுகளுள் ஈதொன்று! வீரசைவத் தோன்றல் சிவப்பிரகாச அடிகளார் தாம் இயற்றிய வெங்கைக் கோவையில்,

“மந்தா கினியணி வேணிப் பிரான் வெங்கை மன்வைநீ

கொந்தார் குழல்மணி மேகலை நூனுட்பம் கொள்வ தெங்ஙன் சிந்தா மணியும் திருக்கோ வையுமெழு திக் கொளினும் நந்தா உரையை யெழுதலெவ் வாறு நவின்றருளே”

எனப் பாடியுள்ள நயம், இலக்கியம் சமயங்கடந்த பார்வைக்குரியது என்பதை நன்கு விளக்கும்.

66

6

‘அரிசி ஆழாக்கு என்றாலும் அடுப்புக்கல் மூன்று” என்பது பழமொழி. மறைமலை ஒரே பிள்ளை. அக்குடும்பத்திற்கு முன்னிருப்பு அன்னையார் மட்டுமே? பின் வருவாய் வேண்டுமே! குந்தித்தின்னின் குன்றும் மாளும்" என்பது பழமொழியன்றோ! பேரா. சுந்தரனார் :

66

நாராயணசாமியாரிடம் பயின்ற மாணவருள் ஒருவர் பேராசிரியர் சுந்தரனார் என்பதை முன்னரே அறிவோம்! அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/193&oldid=1580150" இலிருந்து மீள்விக்கப்பட்டது