உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை

161

இயற்றிய மனோன்மணீயத்தைக் கற்ற மறைமலையார், அந்நூல் நயத்தில் தோய்ந்து நூலாசிரியரைக் காண விரும்பினார்.

பேராசிரியர்

சுந்தரனார் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் மெய்ப்பொருளியல் பேராசிரியராக விளங்கினார். அவர்க்கு, மனோன்மணீய நயம் பற்றியும், தம் ஆசிரியர் பற்றியும், தம்மைப் பற்றியும் செய்திகள் அடங்கிய அகவற்பா ஒன்று எழுதினார். அச் ‘சீட்டுச் செய்'யு ளைக் கண்ட பேராசிரியர் மகிழ்ந்தார். தம் ஆசிரியரையும் சீட்டுச் செய்யுள் விடுத்த மறைமலையாரையும் காண விரும்பியவளாய்த் திருவனந்தை வருமாறு வேண்டினார். மேனாள் மாணவர் விருப்பை நிறைவேற்றவும், இந்நாள் மாணவர் நலத்தைக் கருதியும் நாராயணசாமி யார் தம்மாணவருடன் திருவனந்தபுரம் சென்றார். 1895 ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் கடைசிக் கிழமையில் ஒருநாள் இ து நிகழ்ந்தது. இச் ச் சந்திப்பைப் பற்றி அடிகளார் ழுதியுள்ளதாக அவர் திருமகனார் மறை திருநாவுக்கரசு குறிப்பது:

66

.

அகவற்பாவில் எழுதிய கடிதத்தைக் கண்டு இவரை ஆண்டில் முதியவராகக் கருதியிருந்த சுந்தரம்பிள்ளை அவர்கள், இவர் மிக இளைஞராய் இருத்தலை நேரில் கண்ட அளவானே பெரிதும் வியப்புற்றுத், தாம் முன் எண்ணியதனை மொழிந்தார். ஒரு கிழமை வரையில் இவர் பிள்ளையவர்களோடு அளவளாவி இருக்கையில் இவர் தொல்காப்பியம்,பத்துப்பாட்டு,கலித்தொகை முதலான பழைய சங்கத் தமிழ் இலக்கண இலக்கியங்களிலும் சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி முதலிய காப்பியங்களிலும் வல்லுநராயிருத்தலை ஆராய்ந்து பார்த்து "இத்துணைச் சிறு பொழுதிலேயே இத்துணை உயர்ந்த நூல்களை இவர் இவ்வாறு பயின்று தெளிந்தமை அரிதரிது எனப்புகன்று அங்ஙனம் தாம் பாராட்டியதற்கு அடையாளமாக ஒரு சான்றிதழ் எழுதித் தந்தனர்” என்பது.

திருவனந்தபுரத்தில் வேலை :

அடுத்த ஆண்டிலும் (1896) சுந்தரனார் அஞ்சல் எழுதி அடிகளைத் திருவனந்தபுரத்திற்கு அழைத்தார், அந்நகரில் மார்த்தாண்டன் தம்பி என்பவரால் நடாத்தப்பட்ட ஆங்கிலப் பள்ளியில் தமிழாசிரியராக அடிகளை அமரச் செய்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/194&oldid=1580151" இலிருந்து மீள்விக்கப்பட்டது