உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

மறைமலையம் – 11

திருவுருவை நோக்கிக் கொண்டு கைகுவித்தும் வாழ்த்தியும் அமைதியை நாடியே நின்றார். 9-9-50 இல் தாம் ஈட்டிய செல்வம் பயன்படுத்தப்பட வேண்டிய வகை குறித்து இறுதியாவணம் எழுதினார்.

தாம் தொகுத்த 'மணிமொழி நூல்நிலையம்' பொது மக்களுக்குப் பயன்படும் வகையில் மறைமலையடிகள் நூல் நிலையம் என்னும் பெயரால் பயன்படுத்தப்படவேண்டும் என்றும், தம் நூல்களைப் பதிப்பித்து அதனால் வரும் வாரமுறை வருவாய் தம் குடும்பத்தைச் சாரவேண்டும் என்றும் பணியைச் சைவசித்ததாந்த நூற்பதிப்புக் கழகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் எழுதிவைத்தார். இதனை நிறைவேற்றற் குழுவினராக மருத்துவர் ஆனந்தர் சைவசித்தாந்தக் கழக

ட்

சி

ப்

ர்

ர்

வ.சுப்பையா ஆகியவர்களை உள்ளிட்ட எழுவரை அமர்த்தினர். ஒளியுடல் :

இறுதியாவணம் எழுதி நிறைவேறிய பின்னர் ஐந்து நாள்கள் அடிகள் பருவுடலம் தாங்கியிருந்தார்.15-9-50 மாலை 3.30 மணிக்குத் தமிழும் சைவமும் தத்தளித்துக் கலங்க அடிகள் ஒளியுடன் உற்றார்!

மறுநாட்காலையில் அடிகளின் உடல் மண நீரால் நீராட்டப் பட்டது. மலர் மாலையொடு கண்ணீர் மாலையும் சேர மக்கள் வரிசைவரிசையாய்த் திரண்டனர்! அறிவுச் செல்வர்கள் உற்ற அவலமோ சொல்லில் அடங்காது! அடிகள் உடல் பூம்பல்லக்கில் வைக்கப்பட்டு அன்பர்கள் தோள் மிதவையாக மக்கட் கடலின் ஊடே எடுத்துக் கொண்டு நன்காடு சேர்க்கப்பட்டது. அங்கே பெரும் புலவர்கள் மு.வ; இரா. பி. சேது; தருமாம்பாள்; சானப் சாபி மகமது; பாரிப்பாக்கம் கண்ணப்பர்; ஆடலரசு; ஆகியோர் கையறு நிலை கூறினர். இரவு எட்டுமணியளவில் அடிகளார் பொன்னுடல் செந்தீ நாவுக்கு இரையாயிற்று. 17-5-50 இல் அடிகளார் உடற்பொடி கடலொடு கலந்தது.

66

மூவா யிரவாண்டு மோதும் வடமொழியால்

சாவாம் தகைநின்ற தண்டமிழை - மேவாக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/255&oldid=1580212" இலிருந்து மீள்விக்கப்பட்டது