உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு

249

கொங்கு நாட்டிலே பதினாயிரம் இளைஞர்களிடை இ ளஞர்களிடையே நான்கைந்து சொற்பொழிவுகள் நிகழ்த்தினேன். அப்பெருங் கூட்டம் மிக்க மனக்களிப்பைத் தந்தது. நான் இளைஞனாய் இருந்தபோது தமிழைப் பற்றிப் பேசினால் “பயித்தியக்காரன் என்பார்கள். ஆங்கிலம் அறிந்தவர்களே அன்று மேன்மையாகக் கருதப்பட்டார்கள். அக்காலத்தில் தமிழில் பேசினால் மானக்குறைச்சலாகக் கருதினார்கள். எனக்குத் தமிழைக் கற்றுக் காடுத்தவர் வைதீக சித்தாந்த சண்டமாருதம் சோமசுந்தர நாயகர் அவர்களே ஆவர். என்போன்ற மக்கள் தமிழுணர்ச் சியையும், சைவ சித்தாந்த உணர்ச்சியையும் பெறுவதற்குப் பெருந் துணையாயிருந்தவர் அவரே ஆவர். அவர்கள் முப்பது ஆண்டுகள் வரை தமிழையும் சைவத்தையும் நன்கு கற்றவர்கள்; மிகக் கடினமாக உழைத்தவர்கள். அவர் பதவியையோ பொருளையோ விரும்பவில்லை. அக்காலத்தில் செல்வர்கள் ஏராளமாக இருந்தார்கள். செல்வர்கள் யாரும் அவருக்கு உதவிபுரிய முன்வரவில்லை. பிற்காலத்திலே அவர் இடர்ப்பாடுகளுக்குட்பட்டார்.வறுமையால் வாடினார்.முப்பது ண்டுக்குள் செல்வர்கள் நிலை மாறிப் போயிவிட்டது. அவருடைய இறுதிக்காலத்திலே அப்படிப்பட்ட பெரியவரை நான் கண்டதில்லை. எனது ஆசிரியர் அயல்நாட்டிலே பிறந்திருந்தால் வில்லியம் ஷேக்ஸிபியருக்குக் கோயில் கட்டிய மாதிரி அவருக்கும் ஒரு நினைவுச் சின்னம் எழுப்பி அவருடைய நூல்களை வெளியிட்டு அவர் புகழைப் பரப்பி இருப்பார்கள். இங்கு வில்லியம்ஸ் ஜேம்ஸ் என்ற அறிவாளியைப்பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன்.

பல

இது சைதாப்பேட்டை சிவநெறிக்கழகத்தின் சார்பில் 15-5- 49 அன்று திரு.வி.க. அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழுருவாகிய தலைவர் சுவாமி வேதாசலம் என்னும் மறைமலை அடிகளார் சங்ககாலத் தமிழகம் பற்றிக் காடுத்த தோற்றுவாயேயாகும். இதனைத் தொடர்ந்து பல சொற்பொழிவுகள் ஆற்ற அவர் எண்ணியிருந்தார். ஆனால் அந்தோ! தமிழர் புண்ணியக் குறைவினால் அடிகளார் மேற்கொண்டு சொற்பொழிவுகள் நிகழ்த்த முடியாது போயிற்று.

மெய்கண்டாரே வில்லியம் ஜேம்ஸாகப் பிறந்தாரோ என்று எண்ணவேண்டியிருக்கிறது. வில்லியம் ஜேம்ஸ் அவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/282&oldid=1580241" இலிருந்து மீள்விக்கப்பட்டது