உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

மறைமலையம் – 11 11

உயிரோடு இருந்தபோது, என்னுடைய ஆங்கில நூல்களைப் பார்த்து, “எங்கள் நாட்டில் இல்லாத வேறு சிறந்த கொள்கையும், உங்கள் நாட்டில் இருக்கிறதே" என்று மகிழ்ந்தார். மேலை நாடுகளிலே சைவ சித்தாந்தத்தைப் பரவச் செய்ய வேண்டு மென்ற

ஆர்வம் என்கிருந்தது. வெளிநாடு செல்வதானால், இருபதினாயிரம் ரூபா செலவு செய்யவேண்டும். அவ்வளவு பெருந் தொகையை யான் செலவிட வழியில்லை! இப்பெருந் தொகை கொடுத்து உதவ அப்பொழுது யாரும் முன்வரவில்லை. இப்பொழுதும் இல்லை!

மாக்ஸ்முல்லர், மொழி முதலியவற்றின் தன்மையைப் பற்றி விரிவாக நூல் எழுதியவர், மொழி இல்லாமல் நாம் உயிர் வாழ முடியாது.கையினாலே சாடை காட்டினாலும், கண்களினாலே குறிப்புத் தெரிவித்தாலும், வேறு உறுப்பினாலே அறிவித்தாலும், ஒருவர் கருத்தை, மற்றொருவருக்குப் புலப்படுத்தச் சொற்றொடர்கள் வேண்டும். மொழியின் மூலம் நமக்கு ஆன்றோர்கள் செய்த உதவி என்றும் மறக்க முடியாதது. ஆன்றோர்களின் அரும் பெருமுயற்சி பெரிதும் பாராட்டுதற்குரியது.

சென்ற ஐம்பது ஆண்டுகளாக நான் ஆராய்ச்சி செய்திருக்கிறேன். அறிவினாலே எழுத்தினாலே, உணர்ச்சி யினாலே, நூல் வடிவிலே, புதினத் தாள்களிலே எல்லாம் எழுதி வந்திருக்கிறேன். வெளிநாட்டுப் புதினத்தாள்களிலும் என் ஆராய்ச்சிபற்றி எழுதி வந்திருக்கிறேன். என்னுடைய ஆசிரியர் அறுபது நூல்கள் வரை எழுதியிருக்கிறார். அவர்கள் நூலை எல்லோரும் படித்து விட முடியாது. அவர்கள் நூலிலே நூற்றுக்கு எண்பது வடசொற்கள் கலந்திருக்கும். மிகுதியாக வடசொற்கள் கலந்திருக்கும். ஆசிரியரை நோக்கி, “ஏன் மிகுதியாக வடசொற்களைச் சேர்த்து எழுதுகிறீர்கள்?” என்று கேட்டதற்கு ‘என்னால் வடசொற்களின்றி எழுத இயலாது. நீ வடசொல் கலவாது தனித் தமிழிலே எழுது” என்று சொன்னார். நச்சினார்க்கினியர், சிவஞான முனிவர் முதலிய உரையாசிரியர்கள் எழுத்திலே நான் சொக்கித் தனித்தமிழிலே எழுதத் துவங்கினேன். ஆசிரியர் யான் தனித்தமிழிலேயே எழுதும் கட்டுரைகளைப் பார்த்து, “ நீ தனித் தமிழிலேயே எழுது. உனக்குத் தனித் தமிழிலே எழுதும் ஆற்றலை இறைவன் ஆக்கி உள்ளான். உன் தனித் தமிழைப் படிக்கப்படிக்க என் காதுகளுக்கு இன்பமாயிருக்கிறது” என்றார்.

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/283&oldid=1580242" இலிருந்து மீள்விக்கப்பட்டது