உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

பின்னிணைப்ப

251

“தனித் தமிழில் எழுதுவதை விடாதே! நீ தனித்தமிழிலே எழுதுவது எனக்கு விழிப்பையும் கிளர்ச்சியையும் உண்டு பண்ணுகிறது” என்றும் கூறினார்.

ஆசிரியர் சோமசுந்தர நாயகர் ஒரு பெரிய வேதாந்தி. அவருடைய பேருதவியால்தான் நான் தமிழையும், வடமொழியையும் ஆராய்ச்சி செய்ய முடிந்தது. அவர் செய்த நன்றியை நான் எக்காலத்திலும் மறக்க முடியாது. துயில் நீங்கி எழுந்தவுடன் என் ஆசிரியரின் நிழலுருவப் படத்திற்கு வணக்கம் செலுத்துவது வழக்கம். அன்றாடம் என் ஆசிரியருக்கு வணக்கம் செலுத்துவதில் நான் தவறுவதில்லை!

பிராமணீயம் என்பதை பிராமணம் என்றேதான் எழுதி வந்தேன். கனவிலும் நான் வடமொழியில் எழுதுவதில்லை! என் பிறவி பெரிதும் பயன்பட்டது.

.

சிவஞானமுனிவர் இனிமையான நடையிலே தமிழை வளர்த்தார். நான் எழுதிய நூல்களை இப்பொழுது குடிமக்கள் படிக்கிறார்கள். முன்னர் ஏகினான் என்பதைப் போயினான் என்றும், வம்மின் என்பதை வருக, வாருங்கள் என்றும் எழுதக் கற்றுக்கொண்டேன். கற்றவர் கல்லாதவர் ஆகியவர்களுக்கும் புரியவேண்டும் என்பதற்காகவே அப்படி எழுதினேன். அந்தக் காலத்திலேயும் யான் பேசம் சொற்களிலேயும் எழுத்திலேயும் வடசொல் கலப்பதில்லை! சொற்பொழிவால் தமிழுணர்ச்சியால் யான் செய்த பேறு என்னுடைய பதவியைப் புனித மாக்கிற்று; திருக்குறள் ஒரு பெரிய நூல். ஏதோ ஓரிரண்டு வடசொற்கள் தவிரத் திருக்குறளிலே மற்றவை எல்லாம் தனித் தமிழிலே அமைந்திருப்பதைக் காணலாம்.

அன்பர் திரு. வி.க. எனக்கு இளையவர். அவர் இளமையில் உடல் நலத்துடன் திண்மையாக இருந்தார். அவர் சிறந்த உள்ளம் படைத்தவர். கரவாக உள்ளத்தை மறைத்துப் பேசமாட்டார். அவருக்கென்று ஒருவகையான

நடை

உடை உண்டு.

கொள்கைகளிலே மட்டிலும் அடிக்கடி மாறுவார்.

சில காலம் யான் கொண்ட கருத்துக்கு மாறாக இருந்தார். பையப் பைய அவர் என் வழிக்கு வந்து விட்டார். அந்நாளிலேயே அவர் புலமையை நான் உயர்த்திப் பேச நேர்ந்தது. ஒருவரை ஒருவர் உயர்த்திப் பேசுவது இயல்புதான். அவர் என்னைப்பற்றிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/284&oldid=1580243" இலிருந்து மீள்விக்கப்பட்டது