உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

மறைமலையம் – 11 11 ✰

பேசிய யாவும் உண்மைதான். என்னுடைய தாயாகிய தமிழுக்கும், சைவத்துக்கும் தொண்டாற்ற யான் கடமைப் பட்டிருக்கிறேன்.

அந்தக் காலத்தில் பொருள் மிகுதியாகத் தந்து என் கொள்கைகளை மாற்றிக்கொள்ளும்படி நேயர்களிலே பலர் என்னை வேண்டினார்கள். பட்டங்களும் பதவியும் தந்து உதவுவதாகச் சொன்னார்கள். அதென்னவோ அவற்றிலெல்லாம் எனக்கு விருப்பமில்லை! இப்பொழுதும் பட்டம் பதவிபெற வேண்டும் என்ற விருப்பம் எனக்கில்லை. யான் அறிந்த உண்மையை எல்லோருக்கும் சொல்ல வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். தொண்டின் வாயிலாக என் உயிரைத் தூய்மை செய்துகொள்ள விரும்புகிறேன். அங்ஙனமே செய்து வருகிறேன். கனவிலும் நினைவிலும் தமிழையும், சைவத்தையும் எண்ணி வருகிறேன். இன்றும் யான் இப்படியே எண்ணி வர இறைவன் அருள் செய்வானாக.

அறுமுகப் பெருங்கடவுளே சங்கத்தில் வீற்றிருந்து தமிழை ஆராய்ந்தான். தமிழ் நூல் இலக்கண வரம்புள்ள நூல்; என்றும் மாறாமல் இளமையோடு அது இருக்கிறது. இலக்கண வரம்பில்லாத மொழி மாறிக் கொண்டே போகும் என்று மாக்ஸ்முல்லர் எடுத்துக் காட்டுகிறார்; பாதிரிமார்கள் நல்லெண்ணம் உடையவர்கள். பாதிரிமார்கள் இங்கு வராமல் இருந்திருந்தால் கல்வி வளரவே முடியாது.

காட்டுமிராண்டிகள் பேசுகிற மொழிகூட நாளுக்கு நாள் மாறிக்கொண்டே போகிறது. இலத்தீன் மொழி, கிரேக்க மொழி ஆகியவை இன்று இருந்த இடம் தெரிய வில்லை. ஈப்ரு, அரேபியம் ஆகிய மொழிகளும் இறந்து போயின. தமிழ் மொழி மட்டும் என்றும் மாறாமல் இன்றும் இருக்கிறது.

வாழைப்பழம் என்பதை வாயப்பயம் என்கிறார்கள். அடித்தான் என்பதை அடிச்சான் என்கிறார்கள். மழை பெய்தது என்பதை மழை பேஞ்சுது என்கிறார்கள். ஒரு கட்டடத்தை அமைக்கிறபோது மிகவும் திருத்தமாக அழகாக அமைக்கவேண்டும். ஒரு மொழியின் வளர்ச்சியை மிக்க விழிப்போடு பாதுகாக்க வேண்டும்.

இப்பொழுது உள்ள 999 மொழிகளிலே சிறந்ததாயும் உயிருடையதாயும் ஒரு நிலையில் இருப்பது தமிழே. ஆங்கிலத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/285&oldid=1580245" இலிருந்து மீள்விக்கப்பட்டது