உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு

253

150 ஆண்டுகளாகச் சீர்திருத்தி வந்தார்கள். 150 ஆண்டுகளுக்கு முன் ஆங்கி மொழி சிறந்ததாயில்லை.

Butc என்றும் Put என்றும் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். எழுதுகிற முறையும் சொல்லுகிற முறையும் இடத்துக்கு இடம் மாறுகிறது. calm என்பதில், ஒலி இல்லை. Psychology என்ற

சொல்லை பிஸிகாலஜி என்று பிரஞ்சு மொழியில்

வழங்குகிறார்கள். தமிழிலே அந்தக் குறை இல்லை. எழுதியதை எழுதியவாறே, சொல்லியதைச் சொல்லியவாறே தமிழில் உச்சரிக்கலாம், வட மொழியிலோ பேசும் பொழுதும், எழுதும் பொழுதும் பல குற்றங்கள் காணப்படும்.

அருமைத் தமிழர்களே!

சங்கம் இருந்த நிலை, சங்கம் என்பது என்ன, சங்கத் தமிழ் எப்படி ஓங்கியது. சங்க நூல்கள் எப்படி வெளிவந்தன. என்பவற்றை எல்லாம் சொல்லும்படி கேட்டார்கள். சங்கம் என்றால் கூட்டம். சங்கம் வடமொழி. கழகம் என்பது தமிழ். ஏறக்குறைய ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னே கழகம் ஏற்பட்டது. தமிழிலே நிகரற்ற புலவர்கள் இருந்தார்கள். அவ்வளவு சிறந்த புலவர்களை இப்போது நாம் காண முடியாது. திருவள்ளுவர் காலமும் சங்க காலமும் ஒன்றேதான்.

கிறித்து பிறப்பதற்கு முப்பது ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் பிறந்தார். ஆண்டைத் தவிர அவர் பிறந்த நாளும் திங்களும் அதற்குச் சான்றம் கிடைக்கவில்லை. இன்றைக்கு 1977 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் பிறந்தார் என்பது மட்டும் உறுதி.

வாழ்க்கைக் குறள்

இது பல்லவபுரம், பொதுநிலைக்கழக ஆசிரியர் சுவாமி வேதாசலம் என்னும் மறைமலையடிகள் இயற்றும் செய்யும் நூல்.

வாழ்க்கை இருவகைத்தா மாந்தர்பாற் றோற்றுவிக்கும்

ஊழ்க்கு நிகரே துரை.

இம்மையே யன்றி இனிச்சேர் மறுமையும்

மெய்ம்மையார் கண்டார் விதந்து.

(1)

(2)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/286&oldid=1580247" இலிருந்து மீள்விக்கப்பட்டது