உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு

தேவர்கோ அறியாத தேவதேவன் செழும்பொழில்கள்

257

வல்ல

பயந்து காத்து அழிக்கும் மற்றை, மூவர் கோனாய் நின்ற முதல்வன் என்றும் மாணிக்கவாசகப் பெருமான் எல்லாம் முழுமுதற்கடவுளையே சிவமென்னும் பெயரால் வாழ்த்தி வணங்கி யிருப்பது நன்குவிளங்கும்.

ஆனால், வடநாடுகளில் கோடிக்கணக்கான சிறுதெய்வங் களை வணங்கி, அவற்றுக்கு ஊனுங் கள்ளும் படைத்து வெறியாட்டு வேள்விகள் எடுத்த ஆரியர்கள் இத் தென்றமிழ் நாட்டுக்கு வந்து குடியேறித் தாம் வணங்கிய சிறுதெய்வ வணக்கத்தையும் அவற்றிற்காக எடுத்த வெறியாட்டு வேள்விகளையும் அச்சிறுதெய்வங்களின் மேற் கட்டி விட்ட புராணகதைகளையும் இந்நாடுகளிற் பரவ வைத்தார்கள். இந்நாடுகளில் நாகரிகமும் கல்வியறிவும் இல்லாத கீழ் மக்களே ஆரியர் நடைகளை மிகுதியாய்ப் பின்பற்றலாயினர். அது கண்ட தமிழ்ச்சான்றோர்கள் ஆரியர் வணங்கிய சிறுதெய்வ இழிவும், தமிழர் வணங்கம் முழுமுதற் கடவுளாகிய சிவத்தின் உயர்வும் புலப்படுத்தல் வேண்டித் தாமும் பலபுராணகதைகளை உண்டாக்கலாயினர். இவ்வாறு எழுந்த பலப்பல புராண கதைகளுட் கடவுளிலக்கணத்துக்குப் பொருந்துவனவும் அதற்குப் பொருந்தாதனவும் இருக்கின்றன. அவைகளை யெல்லாம் செவ்வையாக ஆராய்ந்துபார்த்துப் பொருத்தமான வைகளை உரிய சீர்திருத்தம் முதன்மையாகச் செயற்பாலதாகும்.

.

நம் ஆசிரியர்கள் தமதுகாலத்திருந்த பொதுமக்களின் மனச் சார்பை அறிந்து, அவர்கள் பொருட்டுத் தழுவிப்பாடியிருக்கும் புராணகதைகளை யெல்லாம் நாம் அப்படியே தழுவவேண்டு மென்பது கட்டாயமாகாது.ஏனென்றால், அப்பனை வணங்கும் நமது சைவசமயமும், அம்மையை வணங்கும் வைணவ சமயமும் இக்கதைகளைச் சார்ந்து பிழைப்பனஅல்ல. இக்கதைகளின் உதவி வேண்டாமலே இவ்விருசமயங்களும், மக்களின் இம்மை மறுமைவாழ்க்கைக்கு இன்றியமையாதனவாகிய அரியபெரிய மெய்ப்பொருள்களினாலேயே அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆதலால், நம்முடைய

சமயங்களின் உண்மைகளைச் 'சிவஞானபோதம்' 'சிவஞானசித்தியார்' என்னும் உயர்ந்த அறிவு நூல்களில் விளக்கப்பட்டபடி இளம் பருவமுதற் கொண்டே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/290&oldid=1580251" இலிருந்து மீள்விக்கப்பட்டது