உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

மறைமலையம் – 11 11

நம்முடைய மக்களுக்குக் கற்பித்துவர ஏற்பாடு செய்தல் வேண்டும்.

இச்சமய உண்மைகளுள் எதனையுங் குருட்டுத்தனமாய் நம்பும் தீயபழக்கத்தை ஒழித்து எதனையும் தம்மறிவால் ஆராய்ந்து பார்க்கவும் தம் மறிவுக்கு விளங்காதவைகளை அறிந்தோர்பாற் கேட்டுத் தெளியவும் அவாவை உண்டாக்குதல் வேண்டும்.

சிவபிரான் திருக்கோயில்களில் நிறுத்தப்படிருக்கும் சிவலிங்க வடிவானது ஒளிவடிவாய் விளங்கும் இறைவனது நிலையை உணர்த்துவதாகும். இவ்வடிவு எல்லாச் சமயத் தாராலும் வழுத்தி வழிபடுதற்குரிய பொதுவான அடையாள மாய் உலகம் எங்கும் உள்ளதாகும். எந்தச் சமயத்தோரேனும் எந்தச் சாதியாரேனும் இதனை வணங்குவதற்கு விரும்பிக் கோயிலுள் வருவார்களாயின் அவர்களைத் தடைசெய்யாமல் வந்துவணங்குதற்கு இடங்கொடுத்தல் வேண்டும்.

என்மார்க்கம் இருக்குது எல்லாம் வெளியே என்ன எச்சமயத் தவர்களும் வந்து இறைஞ்சா நிற்பர்

என்னும் தாயுமான அடிகளின் திருமொழியை நம்மவர்கள் எப்போதும் நினைவில் வைத்தல் வேண்டும். ஆனாற் கோயிலுள் வருபவர்கள் எல்லோரும் குளித்து முழுகித் துப்புரவான ஆடை உடுத்து அடக்க வொடுக்கமாய் வாய் பேசாது உட்சென்று வணங்கும்படி செய்தல் வேண்டும்.

இப்போது கோயிலுள் இறைவனுக்குச் செய்யும் நாள் வழிபாடுகள் பொருத்தமாய் இருந்தாலும், அவை வடமொழி மந்திரங்களைச் சொல்லிச் செய்யப்படுதலின், பொதுமக்கள் அவற்றின் உண்மை அறியாமல் விழிககின்றனர். தேவார திருவாசகங்களாற் பாடப்பெற்ற கோயில்களே பாராட்டப் படுகின்றன அல்லாமல், வடமொழி மந்திரங்களுக்காக எந்தக் கோயிலும் பாராட்டப் படவில்லை. ஆதலால், வழிபாடு முழுதும் வேதார திருவசாகத் தமிழ்மந்திரங்களைக் கொண்டே நடைபெறுமாறு ஒவ்வொரு கோயிலிலும் ஏற்பாடு செய்தல் வேண்டும்.

இனி ஒவ்வொரு கோயிலின் சார்பாக நடத்தப்பட்டு வரும் திருவிழாக்கள் எப்போதும் போலவே எங்கும் நடைபெறும்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/291&oldid=1580252" இலிருந்து மீள்விக்கப்பட்டது