உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

  • மறைமலையம் – 11

துன்னல் வேண்டிச் சூழ்கன வின்வெண் களிறாக மின்னி மன்னார் யாப்புற நின்றீர் மேதக்கீர்.

ஓமென் சொல்லின் உட்பொரு ளான உயர்வெல்லாம் தூமென் யானைத் தொன்முகங் காட்டிச் சொற்றீரால் காமன் கிள்ளை நாகண வாய்ப்புள் கனிகோதிப் பாமுன் சோலை சூழ்வர மன்னார் பயில்வீரே.

(3)

(4)

அடியார்க் கேற்ற பல்பரி சாலும் அங்கங்கே

குடியாய்க் கோயில் கொண்டனிர் கோடொன் றுடையீரே. படியார் சீரான் அன்பொடு செய்த பைங்கோயில்

மடியா தென்றும் மன்னினிர் மன்னார் மகிழ்ந்தீரே.

(5)

ஒழியா துள்கி யள்ளுரு குந்நல் அடியார்க்குப்

பழியார் செய்யும் அல்ல லறுக்கும் பண்பீரே

கழியார் தோணி பல்பொருள் கூட்டுங் கரைத்தன்னால் அழியாச் செல்வம் மல்கிடு மன்னார் அமர்ந்தீரே.

(6)

அந்தண் உள்ளத் தந்தணர் ஓதும் மறையார்ப்பும் செந்தண் நால்வர் தீந்தமிழ் வேதத் தெளிபண்ணும் சந்தம் ஓவா தென்று மிசைக்குந் தகைமன்னார் வந்தங் குள்ள வாய்மை யருள்சால் வழக்கன்றோ. உள்ளத் தூறும் அன்புறு தொண்டர்க் குருகாமல் கள்ளத் தீது செய்திடுங் கீழ்கள் கலைதேய்ந்து மெள்ளச் சாயுங் கார்மதி போல மெலிந்தல்லல்

(7)

கொள்ளச் செய்து நீர்மலி மன்னார் குடிகொண்டீர்.

(8)

அருட்கண் கொண்டே யானென தற்ற அடியார்கள்

தெருட்கண் ஓங்கித் தெண்பிறை யென்னத் திகழ்வெய்தப்;

பொருட்கள் நல்கித் தீம்புனல் ஊறும் புகழ்மன்னார்

இருட்கள் நீங்க எல்லவன் என்ன இருந்தீரே.

(9)

ஒளியே காணும் ஓமெனும் வண்ண உருவத்தை எளியேம் உய்ய இன்னிசை மன்னார் எடுத்தீரால் களியார் தேனே கற்பகம் நாணக் கமழ்கின்ற அளியார் தூய பூங்கழல் யானை அருட்கன்றே.

(10)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/41&oldid=1579998" இலிருந்து மீள்விக்கப்பட்டது