உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

❖ 11❖ மறைமலையம் – 11

2

நிலமகள் வணக்கம்

(இசை : தோடி)

(இசை : முறாறி) (ஆரபி )

)

செழும்புனலுங் கொழும்பழமும்

எழும்பொதியக் குளிர்வளியும்

தழும்பசியப் பயிர்வளமும்

கெழும்பொழிலே வாழி அன்னாய்!

(1)

நிலா விளங்கும் இராப் பொழுதால் மகிழ்ச்சிதரும் நீள்நிலமே

குலாவுமுகை அவிழ்க்குமலர் உலாவுமரம் நிறைநிலமே

இலாநலனும் விழைபொருளும் விளைநிலமே வாழி அன்னாய்!

(2)

கலாவுநகை தருநிலமே கனிமதுர மொழிநிலமே

ஏழு கோடிபெயர் இடுமொலி கலகல அதிரவே வாழு மீரெழு கோடிகரம் வாளொடும் விதிரவே

சூழும் அன்னை நினை வலிவில ளென்றுபிறர் சொல்வரோ

தாழு வேமுனை மீதுகிளர் ஆண்மைமிகு செல்வியே!

பாழ்படப் பகைவர்படை சாடுவாய், யாம் வாழ்விடப் புரிகுவாய் வாழி அன்னாய்!

கலைப்பொருள் நீயே, கருநிறம் நீயே, நிலைப்படு நெஞ்சமும் நீயே, சொலப்படும் உயிர்க்களன் நீயே, உடம்பகத் தியங்கும் உயிர்ப்பும் நீயே, உலம்பொரு தோளின்

(3)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/43&oldid=1580000" இலிருந்து மீள்விக்கப்பட்டது