உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாமணிக் கோவை

13

4

புள்ளிருக்கு வேளூர்ப் பதிகங்கள்

(முதற் பதிகம்)

திருச்சிற்றம்பலம்

எழுத்தானை எழுத்தான சொல்லானை எழுஞ்சொல்லிற் பழுத்தான பொருளானைப் பல்பிணியிற் பட்டுழன்று புழுத்தேனை யருள்செய்த புள்ளிருக்கும் வேளூரிற் செழித்தானைச் சிவவொளியை என்னுளத்தே சேர்த்தேனே.

(1)

மருந்தானை மருந்தின்றி நோய்தீர்க்கும் மருத்துவனைப் பொருந்தாத மனத்தேனைப் புள்ளிருக்கும் வேளூரில் வருந்தாதை எடுத்தாண்ட வகைநோக்கி மனங்கசிய இருந்தேனை யருள் செய்த என்னரசைத் தொழுதேனே. இனியானை என்னுயிருக் குரியானை எவ்வுயிர்க்குங் கனியான கண்ணுதலைக் கருதாத காலத்துந் தனியான துணையாகித் தண்ணருள்கள் தான்புரிந்து புனலாரும் புள்ளிருக்கும் வேளூரிற் பொலிந்தானே. பொல்லார்க்குப் பொருளருளிப் புகழருளி யின்பருளி நல்லார்க்கு நன்றல்ல பலஅருளி நலிந்தருளல் புல்லாதென் றுறுவேற்கும் புள்ளிருக்கும் வேளூரான் சொல்லாதே யருள்செய்து துணையாகி நின்றானே.

எக்காலும் நினைந்துருகும் எளியேனுக் கிடர்புரிந்தாற் புக்கெங்கு நின்றிடுவென் புள்ளிருக்கும் வேளூரிற்

(2)

(3)

(4)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/46&oldid=1580003" இலிருந்து மீள்விக்கப்பட்டது