உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

மறைமலையம் – 11

றக்கோயென் றிருந்திரங்கித் தளர்வேனைத் தையலொடு பக்கலுறும் என்றாதை பரிந்தளித்தல் செய்தானே.

கண்ணாலுங் காணாதே கருத்தாலும் அறியாதே மண்ணாலும் பிறவியினின் மயங்குகின்ற மனத்தேனைப் புண்ணாகா தருள்செயினும் புள்ளிருக்கும் வேளூரின் கண்ணானான் இருபாலுங் கரந்தருளக் கடவானே.

அருளாலே நிகழ்வதென அவ்வழியே செல்வேனைத் தெருளாமே யிகழ்வாரின் திறமடக்கிச் சிறியேற்குப்

பொருளாகப் பொன்னருளும் புள்ளிருக்கும் வேளூரான் இருளான துயர்தீர எனக்கருளுஞ் செய்தானே. மாறாத காதலுறு மனைவியொடு மக்களையும் பேறாக எனக்கருளும் பேரொளியிற் றிகழ்பிழம்பு போறானும் விளங்குமுருப் புள்ளிருக்கும் வேளூரான் வேறாகி யவர்பிழைக்க விடாதருளச் செய்வானே. அன்போடு முரணாத அருளறத்தின் றுறவெனக்குப் பொன்போலும் அன்பருடன் புள்ளிருக்கும் வேளூரின் மின்போல மிளிர்வதொரு மின்னிடத்தின் மேவுபிரான் இன்போங்க அருள்செய்த தெங்ஙனநான் இசைக்கேனே.

எள்ளிருக்கும் நெய்போல் எங்கிருக்கும் எம்பெருமான்

புள்ளிருக்கும் வேளூரிற் பூவிருக்கும் மணம்போல உள்ளிருக்கும் ஆதலினால் உளமுருகி யன்பென்னுங் கள்ளிருக்கச் சொல்லுமவர் கன்றியநோய் காணாரே.

(இரண்டாம் பதிகம்)

முகிலின் றொகுதி சடையாக

முழுகு சுடரின் பாயொளியே

தகுநின் வடிவின் உருவாகத்

தயங்கு சுடரே முகனாகப்

புகுவென் பிறையே நின்சடைமேற்

பதியும் பிறையாய்ப் பனிமாலை

(5)

(6)

(7)

(8)

(9)

(10)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/47&oldid=1580004" இலிருந்து மீள்விக்கப்பட்டது