உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாமணிக் கோவை

புகுமென் னுளத்திற் புள்ளிருக்கும் வேளுர்ப் புகுந்த பொதுமுதலே.

காலை யொளிருங் கதிரொளியிற்

கயற்கண் அம்மை வடிவுணர்த்தி மாலை யொளியின் மற்றுனது

மாட்சி வடிவம் வகுத்துணர்த்தும்

பாலை யுணரின் நின்னுருவும் மக்களுருவாம் பண்பினையும்

போல நிகழும் புள்ளிருக்கும்

வேளூர்ப் பொலிந்த புனிதவனே.

மக்க ளுருப்போற் சிறிதாகி

மனத்தோ டிலகி, மலிந்தழகிற்

றொக்க வுருவே மற்றெமக்குத்

துணையா முருவென் றுளத்தமைத்து

மிக்கவானின் உருக்கரந்து

மீன்போல் உமையாள் மேவுருவிற்

புக்கு நின்றீர், புள்ளிருக்கும்

வேளூர் அதனிற் புத்தமுதே.

குறைபா டின்றித் தூய்தாகிக்

குலவு மொளியுங் கொழுநிறனும்

நிறைவாய் எழிலிற் றிகழ்வடிவை நினைப்பார் நெஞ்சம் நெக்குருக

உறைவா ரன்றி யருவான

தொன்றை நினைவார் இலரதனாற் பொறையா ருளத்தாய், புள்ளிருக்கும் வேளூரதனிற் பொலிந்த னையால்.

அறிவினுருவும் பொருளுருவும்

ஆக விரண்டாம்; அவற்றுளொன்று

முறிவின் றுளதாம், மற்றொன்று முருங்கி யுறையும் முறைதேரிற்,

15

(1)

(2)

(3)

(4)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/48&oldid=1580005" இலிருந்து மீள்விக்கப்பட்டது