உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாமணிக் கோவை

பேயம் நினைவு பிறிதாகப்

பிடித்தாண் டெம்மைப் பிழைகளெல்லாம் போய நிலையிற் புள்ளிருக்கும்

வேளு ரிருந்து பொருத்தினையால்.

வகுத்தாய் வகுத்த வகைநின்று

வாழ விரும்பும் அடியேமை மிகுத்தார் வினையும் மேல்வினையும் மேவா தருளி மிகவினிதாய்த் தொகுத்தார் வளனிற் றோய்வித்துத்

தொலையா நினது தொழும்பினுக்கே

புகுத்தாய் சிவமே புள்ளிருக்கும்

வேளூர் அமர்ந்த பொன்னரசே.

17

(9)

(10)

திருச்சிற்றம்பலம்

அடிக்குறிப்புகள்

முதற் பதிகம்

1.

2.

எழுத்தான சொல் - எழுத்துக்களாலான சொல்; பழுத்தான அருள்செய்த -அருளாற் காத்த.

முதிர்ந்த;

வருந்தாதை- வருந்தாமல்; ஐகாரம் சாரியை; “போதையார் பொற்கிண்ணத்து என்புழிப் போல.

3.

தனியான தனிச்சிறப்பான.

4.

5.

6.

7.

8.

9.

நலிந்தருளல் - நலிவித்து ஆட்கொண்டருளல்; புல்லாதென்று உறுவேற்கும் பொருந்தாதென்று கூறி வருவேனுக்கும்.

-

புக்கெங்கு நின்றிடுவென் - எங்கே போய் நிற்பேன், என் தாதை - என் தந்தையாகிய சிவபிரான்.

மண் ஆலும் - உலகில் ஊடாடும்; இருபாலும் – வலம் இடமாகிய இருபாலும்; அருள்மிக்க அன்னையுங்கூட என்றபடி.

பொருளாக - பொருளல்லவரைப் பொருளாகச் செய்யும் பொன் என்றபடி. பொன் - பொன் என்னும் பொருள்.

'பிழம்புபோல் தானும் என்க. வேறாகி - நினைப்பால் வேறாகி அருள, அகரம் சாரியை; அருள் செய்தான் என்பது.

'துறவெனக்கு அருள் செய்தது' என்று தொடர்க. பொன் போலும் அன்பர் என்றது, இனிய மனைமக்களை; "பொன் போற் புதல்வர்" என்றார் பிறரும்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/50&oldid=1580007" இலிருந்து மீள்விக்கப்பட்டது