உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10.

18

மறைமலையம் – 11 11 ✰

மின் இடத்தில் - உமையம்மையை இடப் பக்கத்தில்; இவ்வாறு உமையம்மையை உடன்கொண்டு இறைவனும் இல்லறம் பூண்டு உள்ளத் துறவில் திகழ்கின்றான் என்றபடி. இசைக்கேனே - இசைப்பேனே?"

எங்கிருக்கும் எங்குமிருக்கும் ; கள் - தேன்; மெய்யுணர்வு இருக்க இருக்கும்படி; விளங்க. சொல்லுமவர் - இனிமை மிகத் துதிக்கின்றவர்; கன்றிய – நாளாகித் துன்பப்படுகின்ற.

இரண்டாம் பதிகம்

1.

2.

3.

4.

5.

6.

7.

8.

9.

10.

பாய் - பரவிய; சுடரின்ஒளி உருவாக அச் சுடரே முகனாக என்பது; 'புகுவெண் பிறையே' என்றது. முதற்பிறை என்றற்கு; அடைக்கலமென்று புகுகின்ற என்றுமாம். பனி மாலை - குளிர்ந்த நினது மாலை ; புகும் - காதலுற்றமையாற் புகும்.

காலையொளியில் அம்மை வடிவும் மாலையொளியில் அப்பன் வடிவும் வகுத்துக்காட்டும் வகுப்பை நோக்கினால், அவை முறையே மக்களுருவும் நின்னுருவும் போலப் பிரிந்து தெரிகின்றன என்க. மக்களுருவெல்லாம் அம்மை கோலமாதலின் இவ்வாறு கூறினார். எதிர் நிரனிறை அணி; பாலை பகுப்பை சிறிதாகி - குருவாய் எழுந்தருளி யென்பது. உருக்கரந்து என்றது, குருவுருவை; மேவு உருவில், மேவுருவில் எனப்பட்டது.

6

வடிகை என்றது, உருவ வழிபாடு கருதியது; உறைவார், தோய்வார் என்னும் பொருட்டு, அருவானதொன்றை என்றது, அருவ வழிபாட்டை; வழிபடுவார் பொருட்டுப் பொறுமையோடு திருவுருவங்களில் வீற்றிருத்தலின், 'பொறையார்' எனப்பட்டது.

பொருள் - அறிவில் பொருள்; முறிவின்று - பால் முறிதல் போலத் திரிவின்றி உளதாம்; மலம் முறிந்து நல்லுயிராதலின்; முருங்கி - அழிந்து; தூலமாயிருப்பது நிலைமாறி நுண்பொருளாதல்; இஃது அறிவிலாப் பொருள்களை நினைந்தது. கொள்கை என்றது, உயிரின் மாறுதல் கருதி, உயிரில்லாப் பொருள்களில் எழுந்தருளித் திருவுருவ வழிபாட்டில் நின்றருளுங் கொள்கை.

காழிப் பெருமான் - திருஞான சம்பந்தர்.

பாண் – பாட்டு; திருப்பதிகங்கள்; திருக்கோயில்கடோறும் திருமேனி கொண்டருளுதல் பாலுண் குழவியாகிய ஞானசம்பந்தர் பகருமது என்க. பூண் - அணி. பூணே மதியாய் - மதியே பூணாய்.

எண்ணுதற்கெட்டா எழி” லுருவாதலின், ‘எழிலுரு' என்றார்; பொன் புல்கு உருவின் பொன்னிறம் பொருந்திய உருவினிறல்; புரிந்தனிர் - விரும்பினீர்.

நினைவு ஆர் - நினைவு பொருந்திய; பேயம் - பேயேம்; பிறிதாக - பிறிதாதலால்; எச்சம் ஏதுப் பொருளது; பொருத்தினை - நின் அருளே பொருந்தச் செய்தனை, மிகுத்து ஆர் வினையும் - மிகுந்து நிறைந்த ‘சஞ்சித வினையும்; மேல் வினையும்' - ‘ஆகாமிய’ வினையும்; மேவாது - தாக்காதபடி; இனிதாய்த் தொகுத்து ஆர் வளனில் - இனிதாய்ப் பயன்படும் படி உடலூழைத் (ஏன்ற வினையை) தொகுத்துக் கொடுத்து நிரம்பிய வளத்தில்; தொலையா - கெடாத: “புகுவிப்பாய் நின் தொழும்பின்” என

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/51&oldid=1580008" இலிருந்து மீள்விக்கப்பட்டது