உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

மறைமலையம் – 11

புதுமணம் விரிக்குங் கொழுநனை தோறும் வரிச்சிறைத் தும்பி யுருக்குபாண் மிழற்றலொடு குரூஉக்கட் குயிலினங் கூஉமிசை விராஅய்ச்

50 சுவைமிகப் பயக்கவு மிவையெலாங் கேளா வென்றுங் காணாத் துன்றுமகிழ் சிறந்து நெட்டிலை வாழையிற் கட்டுகோட் பழமும் பொரியரை மாவி னுருகுதேம் பழமுங் கடும்பசி தீரக் குடும்பொடு பறித்துண் 55. டுலைக்களத் துருகி யோடுபொன் போல நனிதெளிந் தியங்கும் பனிநீர்க் காலின் கரைமருங் கெய்திக் குடங்கை சேர்த்தி விழைவறு மளவு முழைமுகந்து பருகி யாறுசெல் வருத்தம் பாறிய பின்றை,

60 மாழையஞ் சிதரும் மணங்கெழு நறவும் விரைசெறி முகிழும் நிரைநிரை வீசிப் போதுபொதுண் மரங்கள் மீதுநிழல் செய்யத் தூவியிடு தளிமம் மேவி யாங்குப்

புல்பொழி நிலத்துப் புறமிடைத் துறுவான்

65 வயினோக் குறுதலுங் குயின்வழக் கின்றி மறுவிகந்து விளங்கிய தன்றே; அவ்விடைப் பிறைமதிப் பிள்ளை நிறைமீ னித்திலங் கதிர்க்கை வாரி விதிர்த்துநக் கன்றே, ஈங்கிது காண்டலும் ஓங்கறிவு காழ்கொள வாய்மையே நினைதன் மேயினன் புகுந்து “மக்க ளென்போர் மிக்கபல் லுயிரினும் தலைமைபெரி துடைய நிலைமைய ரென்பது அறிவால் என்னின் அறிவொடு வரூஉங் கடுந்துயர் உறுத்து கவலையோ பலவே

70

66

75 விலங்கினம் என்ப நலங்கிளர் அறிவு

தழுவுதல் இன்மையின் இழிசின என்னின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/55&oldid=1580012" இலிருந்து மீள்விக்கப்பட்டது