உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பாமணிக் கோவை

அகழ்கிழங் குண்டு முகிழ்நறா மாந்தியும் பைங்குழை மென்றும் பால்நீர் குடித்தும்

மலையினும் பொதும்பினும் நிலையாக் கூட்டினும் 80 வருந்துதல் இன்றிப் பொருந்தி யிருந்தும்

ஒருதுயர் இன்றி உறுநலன் பலவே; யதாஅன்று, மக்கடம் அறிவான் முடிந்தன இலவே; போக்கறும் உணர்வு மாக்களுக் கின்மையின் எனை நிலத்து முடியா வினைகளும் இலவே;

85 அறிவறி யாமையின் பெறுவதென் னென்று சூழ்ந்திட லுறினொன்று போந்ததூஉ மின்றே; அகல்கண் ஞாலம் பொதுவின்றிப் புரந்த இகலறு வேந்தரும் இறந்தொழிந் தனரே; பொய்யுரை கிளந்தும் புறம்பழித் தலைந்துங்

090

கையறி யாமையிற் கடுங்கொலை புரிந்தும் நல்லோர் தொகுத்த பல்பொருள் வெளவியும் பாழ்வயிறு நிரப்பிய கீழ்களும் இலரே. உடம்பினை ஓம்பும் கடம்படு பல்லுணா மலையினும் காட்டினும் இலைமலி மரத்தினும் 95 தவப்பல வாகி இருப்பன தேறாது நாளும் நாளும் ஆள்வினைக் கழித்து வாளாது கழிதல் வருந்துநீர் மைத்தே, நானிது செய்தேன் எனதிது என்னும் பேதைமை கந்தாப் பேரிடர் வருமே,

100 அறிவுறு பொருளையும் அறியாப் பொருளையும் ஒப்ப நாடி அத்தகவு இயக்கும்

திருவருட் பெற்றி தேர்தொறும் தேர்தொறும் உவட்டெழும் இன்பந் தலைப்படும் அன்றே; எல்லும் எல்லியும் எழிலுற விளக்கி

105 அந்தரத் தியங்கும் நந்தா விளக்கமும் காலமொடு திறம்பா வளந்தரு மழையும்

23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/56&oldid=1580013" இலிருந்து மீள்விக்கப்பட்டது