உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

மறைமலையம் – 11 11 ✰

மழையால் உயிர்க்கும் மாண்பொருட் டொகுதியும் முழுமுதல் அறிவின் முதல்வன்செய்த அலகிலா அருளால் நிலவுறும் அன்றே;

110 அருட்பெரு வள்ளலாம் அத்தகை யோனை மருட்படும் உணர்வினேன் தலைப்படல் என்றோ; நெஞ்சுநெக் குருகிச் செஞ்சொற் குழற மெய்விதிர் விதிர்ப்ப மயிர்முனை நிறுத்த நாத்தழும் பேற ஏத்துரை மொழிந்து

115 விழுந்தருள் வெள்ளத் தழுந்துநாள் என்றோ! என்னை! என்னை! நான் இவ்வுழிவந்து

பொச்சாந் திருந்து பொழுது கழித்தே நள்ளிடை யாமமா யினதே தெள்ளிய

இளமதி சாயுமுன் இவணின் றகன்று

120 வளமுறு நிதிய வைப்புக் காண்பல் என்று ஓடுகால் மருங்கின் நீடு செல்வுழிப் பளிங்குருக் கன்ன துளங்குநீர் ஓடையில் பால்புரை பிறைக்கதிர் மேன்மிளிர்ந் தாடலும் எழுந்திரை கிழியக் கொடுங்கயல் மறியலும்

125 வான்இடு வில்லின் வாளைமேல் உகளலும் பாசடை நிவந்த நெறியவிழ் ஆம்பல் இரவெனும் அணங்கு திரைமடி இருவிப் பாற்கதிர் ஊட்டும் பாலன் போறலும், அன்புஇடை நெகிழா அன்றிலும் அகன்றிலும் 130 தூதுகல் உண்ணும் காதல்மிகு குரீஇயும் அன்னமும் மயிலும் பொன்னுரை கிள்ளையும் ஆடுவாற் சிரலும் புறவும் பிறவும்

கூடுதொறுங் குழீஇத் துணையொடு துயிறலும், அருப்பமாய் அயல்நின்ற பொருப்பகந் தோறும்

135 கழல்கண் கூகை குழறலோ டுளியம்

உரற்றலும் பிறவும் கருத்துற நோக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/57&oldid=1580014" இலிருந்து மீள்விக்கப்பட்டது