உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாமணிக் கோவை

அல்லாந் தெழுந்த உணர்வின னாகி மல்லலங் காவிற் செல்லுங் காலை

வைகறை யாமம் சிறிதுகழிந் தன்றே;

140 அரனார் அருளொளி விரிதலும் மருவிய ஆணவ வல்லிருள் காணா தொழிந்தாங் கங்கதிர் ஞாயிறு கீழ்ப்பால் எழுதலும் நிறையிருட் படலம் முறைமுறை கழிய

அழகுறு புள்ளினம் துழனியெடுத் தனவே;

145 முழுநெறித் தாமரை புரிநெகிழ்ந் தனவே; இமையாக் கண்ண சுமைமயிர்த் தோகை பீலிவிரித் தொருபால் ஆலும் அன்றே; இன்னன பலவும் பன்முறை நோக்கிக் கவலைதீர் உள்ளமோ டுவகைபெரி துறுவோன்,

150 தன்னுயிர் தன்னெதிர் தான்கண் டதுபோல் பொன்முகடு வேய்ந்த பொற்பமர் அம்பலம் கண்ணெதிர் தோன்றக் கரையறும் இன்பத்துக் குடைந்தனன் போல அடங்கா மதர்ப்புடன் ஓடுவழி ஓடி ஈடுபெறல் இல்லா

155 வச்சிரப் பலகையை நச்சி ஈர்ந்து

தகைபெறு மணிகள் வகைவகை தெரிந்து குயிற்றுமிடங் குயிற்றிப் பூத்தொழில் கனியக் கடவுட் டச்சன் புடைபட வகுத்த விலைவரம் பறியா நிலையுயர் வாயில்

160 உழைநுழைத் துறுதலும், மழைமதர் நோக்கமொடு விரிந்தொழுகு நுதலில் வரிந்தநீ றிலங்க வால்வளை போலப் பால்கெழு கழுத்தில் விழிமணிக் கோவை அழகொடு துவள நுரைமுகந் தன்ன நொறியில்கெழும் அறுவை

165 அரைமருங் கசைய ஒருகரம் அதனால் அரிய அத்துவிதக் கலவையுங் காட்டிச்

25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/58&oldid=1580015" இலிருந்து மீள்விக்கப்பட்டது