உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

  • மறைமலையம் – 11

11 ✰

சிவஞானபோதச் செம்பொருள் தெளித்துப் பண்புறு சீடரைப் பார்வையில் ஆண்டுகொண்டு உருவுடன் வைகிய குருவனைக் கண்டு

170 கழுமிய நோக்கமொடு அழுதுகுறை யிரப்ப, “மன்னா உலகத்து மின்னலின் மறையும்

66

பொய்வளர் யாக்கையில் பொருந்துபல் லுயிரும் மெய்மெய் என்று பொய்படு குநவே;

பொய்ப்பொருள் தம்மில் மெய்ப்பொருள் தேறிப்”

175 புதுநலன் எய்தும் பொருள்கடைப் பிடித்துப் புகுந்தநின் றன்மைக் குவந்தனம் பெரிதே; அன்புடைக் குழந்தாய் நின்பொருட் டீங்குக் கட்புலன் கதுவாத் திப்பிய மெய்யருள் திரளுரு வாக வருதல் மேயினம்;

180 வேறுவே றியற்கை கூறுபல் லுயிரும் உய்குவது காணச் செய்குவம், ஆதலின், தாங்குநல உருவம்ஈ தொன்றோ அன்றே; நிலனும் யாமே, நீரும் யாமே,

தீவளி விசும்புடன் யாவும் நாமே,

185 திங்களும் யாமே, எங்குமாம் உயிரும் வெங்கதிர் ஞாயிறு நங்கிளர் வடிவே; ஈங்ஙனம் ஆயினும் இவற்றின் வேறாய் நாங்கொளும் உருவமும் உண்டே; பாங்குபெற நம்மியல் பறிந்துநம் அருள்வழி நிற்போர்

190 இம்மையே நீங்கா இன்பம் எய்தி

அம்மைதம் அடிநிழல் வைகுவ ரன்றே; அன்புடைத் தோன்றால் இங்கு நம் அருளொடு பிரிவறக் கெழுமி அமர்நிலை நோக்கி ஒருபே ரின்பத் துறைமதி சிறந்' தென்று

195 உருவம் குருவாய் மருவிய முதல்வன் ஒளிப்பிழம் பாகிக் களிப்புறு விடையில் இமையம் பூத்த உமையுடன் தோன்றி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/59&oldid=1580016" இலிருந்து மீள்விக்கப்பட்டது