உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1-4

பாமணிக் கோவை

  • ஈதுநம் உண்மை வடிவாம் ஆதலின் இளையோய் இவ்வுல குளையாங் காறும் 200 பிறழா நினைவின் முறை முறை உயரி மறுமைநம் அடிநிழல் உறுக' என் றருளி நிதிக்கோன் நிதியும் மதிப்ப நல்கிக் கரந்தனன் என்ப ஆகலின், நிரந்தவம் முதல்வன் திருவருள் முனியாது வெஃகி

205 அதற்பட ஒழுகல் ஆற்றிசின் நெஞ்சே! வருவன யாவும் திருவருட் குறிப்பே வாரா தனவும் பேரா அருளே!

வந்தவா வழுத்தி வல்லாங்குப் பாடி வணங்குதும் வாழிய நெஞ்சே! அணங்குடன்

210 மழவிடை அமர்ந்து வழிபடும் அடியார்

வேண்டிய வேண்டியாங் காண்டுகொண் டருளிப் புலியதள் உடீஇ மதிமுகிழ் பிணித்து

மொழியள வமையாக் கழிபெரு வெளியில் ஒருகால் புரிவுடன் தூக்கித்

215 திருநடம் குயிற்றும் தேவர்தம் தேவே!

5-8 5 - 8

அடிக்குறிப்புகள்

27

வளி - காற்று; குலாம் - வீசி விளங்குகின்ற; கறங்கும் - சுற்றும்; விளம்பழம் - விளாம் பழம்; உருண்டைாயாயிருத்தலின் விளாம் பழம் உவமையாயிற்று. குழீஇய-தொகுப்புண்டு கூடிய; ஊக்கும் - ஊக்கங் கொள்ளும்; தெரிவுறு - முன்வந்து தெரிந்த.

விழியிதழ் முகிழ்ப்பில் - கண்ணிமை இமைப்பில்; ஒரு நொடிப் பார்வையில் என்க. கழாய் -கழங்குருண்டைகள்; கைவல் கைத்திறம் மிக்க, பரிசால் தன்மையால்; அமைந்தாங்கு - அமைந்ததென்னும்படி;

9- 16 பேது - பேதம்; பேது உறல் இன்றி - எந் நாளும் வேற்றுமையுறுதல் இல்லாமல், அண்ணலார் - சிவபெருமான்; இயக்குநர் - இருப்போர்.

என்னா – என்று, வெறும் பல - பொருளற்ற பல வெற்றுச்சொற்கள்; கழியுநர் -

மாய்வோர்.

17 - 25 மாண் மாட்சிமைப்பட்ட; குஞ்சியன் - தலையின் மயிர் முடியுடையவன்; திரு –

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/60&oldid=1580017" இலிருந்து மீள்விக்கப்பட்டது