உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

  • மறைமலையம் – 11

கருவிற் றிருவும், வியன் - அகன்ற; அன்றி 'திரு இயல்' எனப் பிரித்து திருமகளின் இயற்கை நோக்கம் உடையவன் என்றுரைப்பினும், அன்றி இரட்டுற மொழியினும் ஆம்; சால் - மிக்க; பல் வழியிலும் புகழ் மருவு குடி என்க. ஒருவாறு இருந்து -ஒரு நிலையில் நிலைத்திருந்து; செறிவு - அடக்கம்; அகல் கண் அகன்ற இடம் பொருந்திய; சிறை - பக்கத்தில்; அளவை - நேரத்தில்.

26- 34 முனைந்து

-

ஊக்கங் கொண்டு; ஒடியா

ஒடிவது போன்ற; அருள்வர ருளுண்டாக; செலவும் - செல்கையும், கழிபேர் - மிக்க பெருமை வாய்ந்த; செலவு - செல்லும் ஒழுகலாறு; பொருளன்றாக - பொருள் செய்யத் தக்ககன்றாக; மன்னிய - நிலைபெற்ற; செல்வத்து - அம்மை; வீடுபேற்றில்; எனாஅ - என்று; நன் பல - நல்லன பல; நன் மொழிகள் பல.

35 - 42பல நினையாது - பல நினைப்புகள் நினையாமல்; ஒருங்கிய - ஒருமையுற்ற, விழைதகக் கலித்த - விரும்பும்படி தழைத்த ; வாலுகம் - வண்மணல்; கோல - அழகிய; நெறியின் - நெறி காரணமாக; கதிர் தெற சூரியன் சுட; இடுகிய நோக்கமொடு – அரைப் பார்வையாய் மருங்கிய கண்ணோடு; சுருங்கிய பார்வையோடு என்க. படுகதிரமையத்து - கதிர்படும் நேரத்தில்; அந்தியில். ஆனா விருப்பொடு - அடங்காத விருப்பத்தோடு

43- 59ததை அரும்பு தழைக்கும் அரும்பை;கையரிக் கொணர்ந்த - சேர்த்துக் கொண்டுவந்த; விரை - 'மகரந்தம்' முதலிய மணப் பொருள்களை

ஒரு சார் ஒரு பக்கம்; பொரு அலைகள் கரைகளை இடித்து பொருகின்ற; காலில் - வாய்க்காலில்; இழும் என - இழும் என்னும் ஒலியுடன்.

நனைதோறும் - மலருந் தறுவாயிலுள்ள பேரரும்புகள்தோறும் வரிச் சிறை - வரிகள் பொருந்திய சிறகுகளையுடைய; பாண் - பாட்டு; குருஉக் கண் -குரு கண்; ஒளியால் நிறமிக்க கண். கேளா - கேட்டுக் கொண்டு; துன்று - மிக்க. கட்டுகோள் – கட்டுக் கொண்ட; சீப்பிற் பிணைந்த. பொரி அரை – பொரிந்த அடிமரத்தையுடைய; தேம்- தித்திப்பான; குடும்பொடு - தொகுப்பாக.

-

தழைத்த; தூவி

பனி - குளிர்ந்த; காலின் - வாய்க்காலின், குடங்கை - இரண்டு உள்ளங் கைகளையும், உழை - அருகில்; ஆறு - வழி; பாறிய - ஒழிந்த நீங்கிய; 60-66 மாழை - குளிர்ந்த; சிதர்- தூறல், துளி; முகிழ் - அரும்பின் இதழ்களும்; பொதுள் அன்னப் பறவையின் வயிற்று நுண்மயிர்; இடு இட்ட; தளிமம் - படுக்கை; பொழி - செழித்த; நிலத்துப் புறம் - நிலத்திடத்தை; மிடைந்து – நெருங்கிப் படுத்து; உறு வான்வயின் - மேல் உற்ற வானத்தின் இடத்தை; குயின் வழக்கு - மேகத்தின் செல்கை; அவ்விடை - அந்த வானிடத்தில் 67-78 நக்கன்று - சிரித்தது; காழ்கொள - உரங்கொள்ள; புகுந்து மேயினன் என்க.

பல் உயிரினும் – பல வகையான எல்லாச் சிற்றுயிர்களிலும்; அறிவொடு - அச் சுட்டறிவோடு; வரும் - முன்வினையினால் வருகின்ற; உறுத்து - உறுத்துகின்ற; வினைத்தொகை.

என்ப - என்பன; இழிசின -இழிந்தன; முகிழ் - ஊறித் தோன்றுகின்ற; குழை - தளிர்கள்; பால்நீர் - பால்போலும் நீர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/61&oldid=1580018" இலிருந்து மீள்விக்கப்பட்டது