உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாமணிக் கோவை

29

79-92பொதும்பினும் - சோலைகளிலும்; உறு -உறுகின்ற அதா அன்று - அதுவன்றியும்;

முடிந்தன – நிறைவேறியவை; போக்கறும் - நீளுதலில்லாத மறந்து போகும். மாக்கள் - விலங்கு முதலியன; எனை - சிறிதும்;

அறிவு அறியாமையின் - அறிவும் அறியாமையுமாய் இருக்கும் நிலைமையில்; சூழ்ந்திடலுறின் - கருதினால்; போந்ததும் - முடிவு செய்யப்பட்டதும்.

அகல்கண் - அகன்ற இடத்தையுடைய; பொது இன்றி- தனக்கே உரியதாய்; புரந்த - ஆட்சி புரிந்து காத்த; இகல் அறு - பகையற்ற.

கிளந்தும் - எடுத்துச் சொல்லியும்; கையறியாமையின் - செய்வதறியாமையால்; கீழ்களும் - கீழ்மக்களும்; இலர் - இறந்து போயினர்; இல்லாதவரானார்.

93 - 110கடம்படு - கடமையுட்பட்ட; மலி - மிக்க; தவ - மிக; ஆள்வினைக்கு அழித்து – முயற்சிகளுக்குத் தம் ஆற்றலைக் கெடுத்துக் கொண்டு; வாளாது - வீணாக; நீர்மைத்து - தன்மையுடையது.

பேதைமை - செருக்கு; கந்தா - பற்றுக்கோடாக.

அறிவுறு பொருள் - உயிர்; உயிர்க்காக உலகப் பொருள்களாதலின் 'ஒப்ப நாடி’ என்றார்; அத்தகவு - அம் முறைமைக் கேற்ப; உவட்டு - தெவிட்டும்படி; எழும் - மிகப் பெருகும்.

எல் - பகல்; எல்லி - இரவு; இரவு பெண்பாலாகக் கருதப்பட்டு இகர விகுதி பெற்று வந்தது; அந்தரத்து - அருள் வெளியில்; நந்தா - அணையாத; திறம்பா மாறாத; தவறாத; உயிர்க்கும் - தோன்றுகின்ற; செய்த - செய்தவை; செய்தன நிலவுறும் என்க.

111- 120 மருள் - அறியாமையுள்; தலைப்படல் - அணைதல்; விதிர் விதிர்ப்ப - நடுங்க; முனை நிறுத்த - கூர்ச்செறிய.

பொச்சாந்திருந்து - மறந்திருந்து; நள்ளிடை – நடு; நிறைநிலவு நாளாதலின். நள்ளிரவுக்குப்பின் மதிசாய்தலை நினைந்து, மதி சாயுமுன் என்றார்; ‘இள மதி’ என்பதில் இளமை ஆற்றலைக் குறித்தது. நிதிய வைப்பு - செல்வத் தொகுதி; பொருளுக்குரிய முயற்சி இங்குப் பொதுவாகக் குறிக்கப்பட்டது.

121-128ஒடுகால் மருங்கின் - கால் போன வழியே; நீடு - நீண்ட தொலைவு; செல்வுழி - சென்ற இடத்து; உருக்கு - உருக்கப்பட்ட பொருள்; துளங்கு - அசைந்தோடுகின்ற; மிளிர்ந்து - ஒளி வீசி; ஆடலும் - அசைதலும்; மறியலும் - இங்கே துள்ளுதலும் என்னும் பொருட்டு; உகளலும் - எழுந்து புரளலும், பாசடை - பசிய இலைகளுக்குமேல்; நிவந்த - உயர்ந்து வளர்ந்திருக்கும்; நெறி -முறுக்கு; ஓரொழுங்குடைமையின் ‘நெறி' எனப்பட்டது. மடி இருவி - மடிப்பில் இருத்தி; ஆம்பல் பாலன் போறலும் என்க. போறலும் - போலுதலும்.

129 - 149அன்றிலும் அகன்றிலும் - பறவையினங்கள் ; தூதுகல் - தூதாகிய கல்; குரீஇ- குருவி; உரை- தேய்வினால் உண்டாகும் நிறம்; 'பொன் உரை கிள்ளை' யென்றது, இங்கே ஐந்நிறக் கிளியை; சிரல் - பறவையினம்; புறவு - புறா; அருப்பமாய் விரும்பத் தக்கதாய்; உளியம் கரடி; உரற்றல் - வலிவாய் ஓசையிடுதல்; அல்லாந்து – மயங்கி; வைகறை யாமம் - வைகறைப் பொழுது.

துழனி - ஒலிகள்; ஆலும் ஆடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/62&oldid=1580019" இலிருந்து மீள்விக்கப்பட்டது