உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

மறைமலையம் – 11

150 - 160 காண்டலருமையின், கண்டது போல் என்றார்; இன்பத்து - இன்பத்தில்;

உருபுதொகச் சாரியை நின்றது; மதர்ப்பு என்றது இங்கே களிப்பை. வச்சிரப் பலகை - பண்பொட்டு விரித்துக் கொள்க; குயிற்றல் - இசைத்தல்; கனிய - முற்ற; கடவுள் தச்சன் - தேவதச்சன் வாயிலுழை நுழைந்+தென்றபடி; மழை மதர் குளிர்ச்சி நிரம்பிய.

161 - 166 விரிந்தொழுகு நுதல் - அகன்ற நுதல்; வால் வளை - தூயகாது வளையம்; ஓல - அசைந்து விளங்க; பால் கெழு - பகுதியாய்ப் பொருந்தித் தெரிந்த; விழி மணி - சிவத்தின் விழி போன்ற மணிகள்; உருத்திகராக்கம்; துவள - அசைய; நொறில் - நுட்பம்; அறுவை - ஆடை; அரை மருங்கு - இடுப்பின் பக்கம்; சின் முத்திரை காட்டுதலால், ஒரு கரம் அதனால் என்றார்; ஒரு கரம் என்றது. வலக்கையை மும்மலங்களை நீங்கிச் சிவத்தோடு இரண்டறக் கலத்தலைச் சின்முத்திரையால் சிவஞான போதக் கருத்துத் தெளிவிக்கப்படுதலால் அத்துவிதக் கலவையுங்காட்டி' என்றார்; உம்மை ; சிறப்பு.

168- 182 பார்வையில் - திருநோக்கத் தீக்கையால்; உருவுடன் வைகிய - திருவுருக் கொண்டு எழுந்தருளிய; கழுமிய - நிறைந்த; மெய் மெய் என்று - நில்லா உடம்பை 'மெய்' என்னும் பெயரால் அடுத்தடுத்துச் சொல்லிக்கொண்டு; கதுவா கொள்ளா; திப்பிய மேலான; அருள் திரள் உருவாக

அருள் திரண்ட அருளுருவாக; மேயினம். மேவினேம்- தாங்கும் - எடுத்துக்கொள்ளும்; ஒன்றோ அன்று - ஒன்று மட்டு மன்று.

191-208 அம்மை - இங்கே மறுமையில்; துறக்கஞ் செல்லும் மறு பிறப்பன்று; இம்மை நீங்கிய அடுத்த நிலை என்பது கருத்து.

வைகுவர் - தங்கி இன்புறுவர்; அன்று ஏ -அசைகள்; அமர்-அமரும்; இருக்கும் நிலை - நிலையாக உள்ள பேரின்ப நிலைமை; சிறந்து - மேம்பட்டு.

பூத்த - தோன்றிய

உளையாங்காறும் - உள்ளனையான வரையில், இருக்கும் வரையிலென்க; உயிர்த்திருக்கும் வரையில் என்றபடி. பிறழா - ஐயந்திரிபுகளால் மாறித் தவறிவிடாத; உயரி - உயர்ந்து.

நிதியும் - உம்மை இறந்தது தழீஇயது. நிரந்த தவம் என்க; ஈற்றகரம் தொக்கது; நிரந்த - முறைப்பட்ட வரிசையான்; முனியாது வெஃகி - வெறுக்காமல் விரும்பி; துன்பக் காலங்களில் வெறுத்தல் பலரிடம் காணப்படுதலின் இவ்வாறு கூறினார். அதன்பட-அதன்படி; ஆற்றிசின்; ஆற்று இசின்; ஆற்று -ஆற்றுக; இசின் -, அசை. பேரா - நீங்காத; வந்தவா - வந்தவாறு.

212 215 மதிமுகிழ்

மதியரும்பு; பிறைநிலா என்றபடி. வெளியில் திருச்சிற்றம்பலத்தில்; புரிவுடன் - செய்கை விருப்புடன்; ஆடல் விருப்பத்துடன். குயிற்றும் - இழைந்து நடமிடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/63&oldid=1580020" இலிருந்து மீள்விக்கப்பட்டது