உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாமணிக் கோவை

31

6

வந்தே மாதரம்

“கோயில் தொறும் கோயில் தொறும் அருட்கோலங் கொண்டிருக்கும் தாய்துர்க்கே தமியேம்நின் படிவமன்றே பரவுவதே;

பாய்படைகள் பதின்கரத்தும் பற்றுகின்ற தாய்துர்க்கே

சேயிதழ்த்தா மரைநிழல்வாழ் திருமகளும் நீயன்றே;

மேயகலை விழுப்பொருள்கள் விளக்குமின்னும் நீயானால் சேயேம்நின் திருவடிகள் வாழ்த்துவதும் சிறப்பாமே;

ல்

(1)

அன்னாய் வாழியரும் பொன்னாள் வாழி, ஒப்பில் மின்னாள் வாழி, கனி நீரும்வாழி, வந்தேமாதரம்; களங்கமிலா தினிதாகி வளம்பெறுநன் னகைதுலங்க விளங்குபசுங் கதிர்முகம்எங் களைகணாம் அன்னாய், நின் இளங்குமுத வாய்முகமெம் இன்னுணவாம் அன்னாய்

வந்தேமாதரம்”

(2)

1.

2.

அடிக்குறிப்புகள்

"அன்னையாகிய கொற்றவையை விளித்து வணக்கம் செலுத்தும் முறையில் இப்பாடல்கள் அமைந்துள்ளன.”

துர்க்கே - துர்க்கை யம்மையே; படிவம் - உருவம்; பாய் படைகள் - பாயும் கருவிகள்; பதின் கரத்தும் பத்துக் கைகளிலும், நிழல் - ஒளியில்;

மின்னும் - மின்போல் வாயும்.

பொன் நாள் - பொன் போன்ற வாழ்நாள்; மின்னாள் - மின்னலைப் போன்றாள்; கனிநீரும் - கனிச்சாறு ஒத்தாய்; வந்தே மாதரம் - வணக்கம் தாயே; களைகண் ஆம் என்க. இன் உணவாம் - இனிய துய்ப்பாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/64&oldid=1580021" இலிருந்து மீள்விக்கப்பட்டது