உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

❖ 11❖ மறைமலையம் – 11

7

செவ்வந்திப் பூ

இசை: சங்கராபரணம் (தரவுகொச்சகக் கலிப்பா )

'விலங்கலினும் விலங்கல்சேர் படுகரினும் மிதந்துசெலும் துலங்குபுய லெனவேயான் துணையின்றித் திரிந்தவழிப் பொலன்வண்ணச் செவ்வந்திப் பூத்தொகுதி மரங்கீழும் இலங்கேரி மருங்கும்உலாம் இனியவளி வீசுதொறும் கலங்கிநனி யாடுதலைக் கதுமெனநான் கண்டனெனால். ஒளிபரந்த வானகத்தில் ஒளிர்ந்துமினும் உடுக்குலம்போல் நளிமிகுந்த கடல்வளைவின் கரைநெடுக நனிநீண்டு விளிவில்லா வரிசையுடன் மிகத்தொடர்ந்து விளங்கும்அவை தெளிபதினா யிரங்கணக்காய்த் திகழ்தலையை மிகஅசைத்துக் களிசிறந்து குனிப்பதையோர் கண்ணோக்கிற் கண்டெனெனால்.

குனிக்குமலர்ப் பக்கலிலே கடல்அலையுங் குனித்தனவே, இனிக்குமலர் என்றாலும் இலங்கலையிற் சிறந்தனவே; நுனிக்குமதிச் செம்புலவன் நுவன்றகளிக் கூட்டத்தில் கனிக்குமனக் களிப்பின்றி யமர்குவது காணேனே; தனிக்குமனத் தமியேனும் நோக்கின்மேல் நோக்கினனே. கருதிமிக நோக்கிடினும் காட்சியென்பாற் கொணர்வித்த இருநிதிய மேதென்ன யான்சிறிது மெண்ணிலனே தருதுயர மனத்தோடு தனிக்காட்டில் மிசைக்கிடக்கும் ஒருவனேன் அகத்திலவை தனிமைமகிழ் வொளிவீச உருகுமனம் பலகாலும் உவந்தவற்றோ டாடினவே.'

(1)

(2)

(3)

(4)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/65&oldid=1580022" இலிருந்து மீள்விக்கப்பட்டது