உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாமணிக் கோவை

நிலவுறு கூறா யமைகுவ மவனை

விதுப்புறு நெஞ்சோ டாடவன் வழுத்தும்

35

பலமதக் கொள்கை கிழிக்கினுஞ் சூறை

பரந்ததைத் துரக்கினும் அவைவெளித் தோற்றம்

கலகவக் கொள்கை யனைத்தையுங் கடந்து

(3)

1.

2.

3.

கருதரு மெய்ம்மைய னாயவ னுறையும்.

மெய்ப்பொரு ளறிவைப் பயந்தழி வில்லா

மேதகு நிலையைத் தெளிவுற விளக்கிக் கைப்புடைச் சாக்கா டெனும்வழி பிழைத்துக் கனவென நிலையா வுலகியல் பறுத்துப் பொய்ப்பொருள் மறைக்கும் பனியென நலியப் புகலரும் வரம்பில் அறிவினா லிறைவற்

றுய்க்குமா கடவு மன்பெனும் என்றூழ்

துலங்குதல் காண்டும் வருதிரோ துணைவீர்.

அடிக்குறிப்புகள்

1897 சித்தாந்த தீபிகையில் வெளிவந்தது

(4)

வளியது நாப்பண் - காற்றின் நடுவில்; நீல விதானத்தின் - நீல மேற்கட்டியில்; களியது - களிப்பு; அது, பகுதிப் பொருள் விகுதி. திரை மடியோ - அலையின் மடிப்பிலோ; நளிதர - செறிவுமிக; முழைஞ்சோ குகைகளிலோ; 'இயங்கும்' என்றது, தீ வளர்ப்பு ஓவாது நடத்தலைக் குறித்தது. நசை - அன்பு. இவற்றிலெல்லாம் தங்கிக் கிடந்ததோ? இசைவு உற - பெருத்தமுற.

(அன்பு என்பது, எங்கிருக்கிறது' என்றபடி)

கதிர்நிறம் ஒளிவண்ணம்; கண்புலன் கதுவிடாது கட்புலனுக்குப் புலப்படாமல்; மூ இலா - மூவா; இயல்பின் - இயல்பைப் போல; அதிர்வு இலாத - அசைதல் இல்லாத; இருளினுள் - அறியாமை யிருளில்; அங்கண் - அழகிய இடத்தையுடைய; பொதிர்வு உற - நீங்க; விடுதலையுற; இருளிலிருந்து நீங்க; உழிதரு - திரிதலின். (இறைவனைப் போல் அறியாமையிருள் போக்கும் ஞாயிற்றொளியாய் என்னுற்ள அன்பு உள்ளது)

(இறைவனது ஆதலின்; உகுதலில்லாது - பிரியாமல்; விதுப்புறு - அன்பினால் நடுங்கும்; ஆடவன் - முயல்வோன்; "எவ்வழி நல்லவர் ஆடவர்" எண்புழிப்போல் வந்தது; கிழிக்கினும் - பிரித்து ஆராய்ந்தாலும்; உம்மை, எண்; சூறை பரந்ததைத் துரக்கினும் கருத்துக்கள் கொள்ளைபோனதைப் பின்பற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/68&oldid=1580025" இலிருந்து மீள்விக்கப்பட்டது