உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.

36

11 ✰

மறைமலையம் – 11

யெடுத்தாலும்; வெளி - அருள்வெளி; அவன் உறையும் - அவ்விறைவன் தங்கும்; அவன் என்றது, இறைவனாய அன்பு.

(அன்பு – முதல்வனாய்த் தங்கும்; உலகெலாம் எமதே என்னும் பொதுமை காணும் என்றபடி.)

மெய்ப்பொருள் அறிவை - கடவுளுணர்வை; மெய்ஞ்ஞானத்தை; மேதகு நிலை - மேன்மை தக்க வீடுபேற்று நிலையை; கைப்பு - கசப்பு; பிழைத்து – தப்பி; பொய்ப்பொருள் மறைக்கும் பனி என - பொந்துபோலும் பள்ளங்களையும் மறைத்து வருத்தும் பனிப்படலம் ஞாயிற்றொளியால் நீங்குதல் போல; நலிய -

அறியாமை நீங்க; இறைவன் - இறைவனை; கடவும் - செலுத்தும்; என்றூழ் - ஞாயிற்றொளி; துலங்குதல் விளங்குதல்; காண்டும் காண்போம்; வருதிர் வருக. துணைவீர் - உடன்பிறப்பினரே!

(வீடுபேற்றுக்கு வழிகூட்டும் அன்பொளி காண்போம் வருக என்பது) இச்செய்யுட்கள் அன்பின் விளக்கம் கூறின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/69&oldid=1580026" இலிருந்து மீள்விக்கப்பட்டது