உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாமணிக் கோவை

37

9

விருதைச் சிவஞான யோகிகள் மீது பாடிய புகழ்ப்பா

சீர்கொண்ட அளிக்குலங்கள் செழுந்தருவுள் நறுமலர்க்கண் ணீர்கொண்டு கரைந்துருக நிகழ்த்துமிசைக் குவப்பெய்தி வார்கொண்ட சடைமுடியெம் வள்ளலைப்போல் வன்கொன்றை ஏர்கொண்ட பொன்சொரியு மெழிற்பொழில்சூழ் விருதையூர்.

(1)

இனையவளம் பதிதன்னு ளினியதமிழ்ப் பனுவலினுங் கனைகடலின் விரிவுடைய காமர்வட மொழித்துறையுந் தனைநிகர்ப்பா ரிலராகத் தனிவிளங்கு சிவஞான முனைவனையே யொத்துளார், சிவஞான யோகியார்.

(2)

உலகமெனும் பூம்பிடகை யொளிர்சைவ மணியைமருட் கலகநெறிப் புறச்சமயக் கனையிருள்வாய்ப் பெயுங்காலை இலகறிவுந் தடந்தோளும் எழில்வடிவும் பெருங்கருணை உலவுதிரு விழியிணையும் எமையுடைய வுரவடியும். உளமுருகுங் கட்டுரையு முயர்கலையின் றெளிவுரையும் பளகறுதன் னாவுரையும் விழுமியபற் பலநடையும் வளமுறுவொன் றுறுமாற்றாற் போந்தருளி வழங்கிருளை இளவளஞா யிறுபோலப் புறச்சமய இருள்பாறி.

(3)

(4)

தலையாய சைவமணி தொன்மைபோற் றயங்குறவிப்

புலைநாயிற் கடையேமும் போந்ததனைப் பெறவிளக்கும்

துலைநாவை யுறழ்சோம சுந்தரமா மெங்கள்பெருந்

தலைநாயன் பெருங்கேண்மைப் பெருந்திருவுந் தலைக்கொண்டார். (5)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/70&oldid=1580027" இலிருந்து மீள்விக்கப்பட்டது