உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

மறைமலையம் – 11

ஆண்டகையாம் அவள்கேண்மை கொண்டதனுக் கடுத்தவா றீண்டுவலைச் சமயநெறி மாழாக்கு மியல்பினார்

வேண்டுவன வேண்டியாங் கெய்தலுறுந் தவமுடையார் தூண்டுமனச் செயல்செறிக்குந் துறவொழுக்க மேற்கொண்டார்.

மும்மறையின் நடுக்கிடந்த இரண்டெழுத்தே மொழிகுவார் செம்மைநெறித் திருத்தொண்டிற் கியைசெயலே சிறந்துளார் தம்மனத்தைச் சிவபெருமான் திருவடிக்கீழ்த் தவிசாக மெய்ம்மையே யிடுவித்தா ரெமையுடைய மேன்மையார்.

(6)

(7)

என்னுரையிலமையாத இளையபுக ழியோகியார்

இன்னிசைப்பண் விரும்புதலும் இசைப்பாட்டு நும்பெருமாற் கென்னாளு மிலவென்றே யிழுக்குநெறிப் பாகவதர் சொன்னாவி னுரைகேட்டுத் துளக்கமுறு முளத்தினார்.

(8)

முத்திறத்துத் தமிழ்மலய முனிக்கிறைவன் உரைத்ததுவும் வித்தியா தரரிருவர் விளங்குசெவி யிருத்தியது மெத்துபுக ழிலங்கையர்கோன் மிகப்பாடி உய்ந்ததுவும் எத்துணையு மறியாத வேழையர்க்கு மிகப்பரிவார். இழுக்குநெறிப் பாகவத ரியம்புமுரை யெஞ்ஞான்றும் வழுக்குரையாம் படிதெளிய வளமுடைய செழுந்தமிழின் வழக்குநடை யிந்நூலை மறைமுதலா மருங்கலையின் விருப்பமுறு மேற்கோளும் வியற்றமிழிற் காட்டுகளும்.

எழுவாயும் வேற்றுமையும் என்றுரைக்குங் காட்சியொடு வழுவாத வைத்துறுப்பால் வருங்கருத்தும் வேறுரைக்கு முழுவாய்மை யுரைமூன்றும் இடைவிரவ முரணுவார் பழுதுடைய கோள்களைந்து பாங்குபெற வியற்றினார்.

(9)

(10)

(11)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/71&oldid=1580028" இலிருந்து மீள்விக்கப்பட்டது