உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

❖ 11❖ மறைமலையம் – 11

10

தமிழ்த்தாய் வாழ்த்து

செழுந்தமி ழென்னுங் கொழுந்தமிழ்க் குழவியை மன்றினுட் குனிக்குங் கொன்றையஞ் சடையோன் தெறுவேல் ஏந்திய அறுமுகற் கருள

ஆங்கவ னினிதெழுந் தேற்றுப் பாங்குறக்

5 குறங்கினி லிரீஇ வெரிந்புறந் தைவந் தியல்வகை யென்னும் பயில்பா லூட்டிச் சின்னாள் வளர்த்த பின்னர் மன்னிய வெள்ளியம் பலத்துட் டுள்ளிய பெருமான் பீடுற வமர்ந்த கூடன்மா நகரின்

10

மெய்பெற விருந்த தெய்வப் புலமைப்

பெருமதிப் புலவோர்க் குரிமையினுதவினன்; அவரும்

உளந்துளும் புவகையின் வளம்பெற ஏற்றே

அகம்புறம் என்னுந் தொகுகலன் பூட்டி நூலெனு மாடையும் வாலரைக் கொளீஇச்

15 சொற்சுவை பொருட்சுவை கனிந்த பற்பல பாவுணா நாடொறும் பல்வே றூட்டிச் சங்க மென்னும் பொங்குபூந் தடத்தினும் ஆலவா யென்னுங் கோலமார் காவினும் வடமொழி யென்னு மடங்கெழு தோழியொடு

20 முடம்படுத் தொருங்கு விடுப்பக் குடம்புரை கொங்கைப் பொறைகெழு கொழுந்தமிழ் மங்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/73&oldid=1580030" இலிருந்து மீள்விக்கப்பட்டது